Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளத்தில் உள்ள 08 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான எம்.எச்.எம். நவவி, நேற்று தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“புத்தளம் தொகுதியில் உள்ள பாடசலைகளில் மிக நீண்ட காலமாக இடப்பற்றாகுறை காணப்பட்டு வருகிறது. இதனால் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாணவர்களும் ஆசிரியர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவேதான் புத்தளம் தொகுதியில் காணப்படும் கட்டடப் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில், முதல்கட்டமாக எட்டு பாடசாலைகளுக்கு வகுப்பறைக் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய பாடசாலைகளுக்கும் கட்டம் கட்டமாக புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு உரிய நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது.
அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றினையும் ஆரம்பித்துள்ளோம்.
அந்த வகையில் புதிய எட்டு கணினி நிலையங்களை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் முதல் கட்டமாக 1,000 மாணவர்களுக்கு நூறு நாட்கள் கணினிப் பயிற்சியையும் வழங்கவுள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago