2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மதுரங்குளத்தில் ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம், மதுரங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புகையிரதப் பாதையருகில் இருந்து இனங்காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை பகல் கண்டெடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்துள்ள நபர் பற்றிய விபரங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த சடலம் சிலாபம் வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X