2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

டெங்கு நோய் விழிப்புணர்வு வீதி நாடகம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு புத்தளம் நகர சபை ஏற்பாடு செய்திருந்த  டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வீதி  நாடகம் இன்று புதன்கிழமை புத்தளம் பிரதான பஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

புத்தளம் நகர சபைத் தலைவர் கோ.ஏ.பாயிஸின் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள், புத்தளம் தள வைத்தியசாலை அதிகாரிகள், புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் அதிகாரிகளுடன் புத்தளம் நகர சபை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

'சூழலைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த வீதி நாடகம் டெங்கிலிருந்து மக்கள் எவ்வாறு தம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக புத்தளம் நகர சபையின் பொதுசுகாதார பரிசோதகர் என்.சுரேஷ் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X