2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கெப்பிட்டிகொள்ளாவையில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட்

வடமத்திய மாகாண மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட ரன்பிமட அருணலு திட்டத்தின் கீழ் தேர்தல் தொகுதிகள் தோறும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நடமாடும் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை கெப்பிட்டிகொள்ளாவையில் ஆரம்பமானது.

வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோனின் திட்டத்துக்கு  அமைய  கெப்பிட்டிகொள்ளாவ, மதவாச்சி, பதவியா பிரதேச செயலகப் பிரிவுகளை  உள்ளடக்கும் வகையில் நேற்று ஆரம்பமான இந்த நடமாடும் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

முதலமைச்சுடன் மாகாணத்தின் நான்கு அமைச்சுக்களும் ஒன்றிணைந்து இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் காணி, கிராமிய வீதி, கல்வி, சுகாதாரம், விவசாயம், கூட்டுறவு தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவைக்கவுள்ளது.

இப்பகுதி மக்களிடமிருந்து தகவல்களைப் பெற்று இப்பகுதிகளில் எவ்வாறான அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் தீர்மானிக்கப்படும் என வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் இதன்போது தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .