2026 மார்ச் 30, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 19 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

மாரவில, லங்சிகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சிலாபம் - கொழும்பு வீதியில் 2 மோட்டார் சைக்கிள்கள்  நேருக்குநேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்  மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை இரவே மரணமடைந்துள்ளார். 

மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாத்தாண்டி பஹல, வலஹாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மாரவில பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .