2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிக்குவை தாக்கிய மூவர் கைது

Super User   / 2013 ஜூன் 26 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம், நவகத்தேகம - ரம்பகனயாகமே பௌத்த மத்தியஸ்தானத்தின் தலைமை பௌத்த பிக்குகவை தாக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நவகத்தேகம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியால் சென்ற பிக்குவிடம் பிரித் ஓதுமாறு குறித்த மூன்று சந்தேகநபர்களும் மதுபோதையில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீதியில் பிரித் சொல்ல முடியாது என பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார்.

இதனால், போதையிலிருந்த சந்தேக நபர்கள் மதகுருவின் கண்ணத்தில் அறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0

  • AMBI. Wednesday, 26 June 2013 04:04 PM

    அவர்கள்தான் நமது நாட்டின் செல்ல பிள்ளைகள் என்று தெரியாதா உமக்கு...???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .