2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இரு சிறுவர்கள் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்,ஆர்.ரஸ்மின்


வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரம்பை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்திலேயே இந்த இரண்டு சகோதரர்களும் மரணமடைந்துள்ளனர். 

கல்பிட்டியிலிருந்து வந்துகொண்டிருந்த வான் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று வீதியால் சென்றுகொண்டிருந்த இந்த 2 சகோதரர்களின் மீதும் மோதிவிட்டு பின்னர் அங்கிருந்த வீடு ஒன்றின் மதிலுடன்  மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரம்பை மீள்குடியேற்ற கிராமத்தில் வசிக்கும் அண்ணாவும் தம்பியுமே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆர்.ரைகான் (வயது 14), ஆர்.ரம்ஸான் (வயது 12) ஆகிய இரண்டு சகோதரர்களுமே விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (படங்கள்: எம்.எஸ்.முஸப்பிர்)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .