2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் நிதிசார் நிறுவனமாக MBSL & Finance பிஎல்சி தெரிவு

Editorial   / 2017 மே 31 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 மத்திய கிழக்கு ஆசிய தலைமைத்துவ அமர்வு விருதுகள் 2017இல், “ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் நிதிசார் நிறுவனம்” எனும் விருதை, மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா (MBSL) அன்ட் Finance பிஎல்சி தனதாக்கியிருந்தது. ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த, நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் போட்டி மத்தியில் வெல்லப்பட்டிருந்த இந்த விருதின் மூலமாக, இலங்கையின் நிதிசார் கட்டமைப்பில் MBSL கொண்டுள்ள நிலைப்பாடு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இரு வருடங்கள் எனும் குறுகிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்த சிக்கல்கள் நிறைந்த மூன்று நிறுவனங்களின் ஒன்றிணைவாக அமைந்திருந்த MBSL, அதன் மக்களை ஒன்றிணைப்பது, செயன்முறைகளை வகைப்படுத்துவது மற்றும் வளர்ச்சிக் கொள்கை ஆகியவற்றை முன்னெடுத்திருந்தது. இதனூடாக அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த நிதிசார் நிறுவனமாக திகழ்கிறது. 2016இல் MBSL பதிவு செய்திருந்த உறுதியான நிதிசார் பெறுபேறுகளினூடாக இது மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது. 2016 நிறைவில் நிறுவனத்தின் மூலமாக, 293 சதவீத ஒன்று திரட்டப்பட்ட வருமான வளர்ச்சி பதிவாகியிருந்தது. வரிக்கு பிந்திய இலாபமாக 176 மில்லியன் ரூபாய் பதிவாகியிருந்தது. 

இந்த சாதனைகள், மத்திய கிழக்கு ஆசிய தலைமைத்துவ மாநாடு விருதுகள் வழங்கல் 2017 நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வு டுபாய், மரீனாவில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களின் பெருமளவு வியாபார பிரமுகர்கள் மற்றும் பெருமைக்குரிய கூட்டாண்மை நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில் MBSL தலைவர் கலாநிதி. சுஜீவ லொகுஹேவா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ரி.முதுகல ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .