Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மே 18 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FInance இவ்வருட தமிழ் - சிங்கள புதுவருடத்தை கொண்டாடுவதற்காக மகிழ்ச்சி நிறைந்த சம்பிரதாய புதுவருட விளையாட்டுக்கள் அடங்கிய டிஜிட்டல் தளமொன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் புதிய வேலைத்திட்டமான இந்த நடவடிக்கை இலங்கை வாழ் அனைவரும் தங்களது வீட்டிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வேளையில் தமது நெருங்கியவர்களுடன் புதுவருடத்தை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நிறுவனம் எடுத்த முயற்சியானது வெற்றியளித்துள்ளது.
HNB FInanceஇன் 'அபே கெதர அவுருது' டிஜிட்டல் தளத்தில் சம்பிரதாயபூர்வ புதுவருட விளையாட்டுக்கள் பல அடங்கியதுடன் அதற்கு இலங்கை வாழ் அனைவரும் அவர்களது வீட்டில் இருந்த வண்ணம் இலகுவாக அதில் பங்குகொள்ள முடிந்தது. தலையணை சண்டை, கனாமுட்டி உடைத்தல், சருக்கல் மரம், யானையின் கண்ணில் புள்ளடியிடுதல் உள்ளிட்ட பல்வேறு வினோதமான போட்டிகள் பல இதில் அடங்கின. மேலும் இந்த டிஜிட்டல் தளத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்காக பதிவு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் இந்த போட்டியின் நிறைவின் போது வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் புதுவருட சம்பிரதாயங்களை பின்பற்றக் கூடிய விதத்திலான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வேலைத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த HNB FInanceஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “COVID-19 தொற்று நோய் தற்போது சுகாதார, மன ரீதியான மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாக இருப்பதுடன் வரலாற்றில் முதல் முறையாக இலங்கையர்களான நாம் வீட்டில் அடைப்பட்டு புதுவருடத்தை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த காலத்தில் சமூக தனிமைப்படுத்தலை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான சந்தர்ப்பமாக உள்ளதென நாம் நம்புகிறோம்.
“இந்த நிலைமையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள போக்குரத்து ஆலோசனைகளை பின்பற்றி எமது வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் இருக்கும் போது அமைதியாக காலத்தைக் கழிப்பதற்கு உதவி செய்யும் வகையில் இந்த புதுவருட காலத்தில் இவ்வாறான தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்காக எமது மக்களுக்கு உதவி செய்வதற்கு நாம் விரும்பம் கொண்டோம். நிறுவனத்தின் 'அபே கெதர அவுருது' டிஜிட்டல் தளமான இந்த எண்ணக்கரு ஒரு சிறந்த விளைவாக அமைந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
HNB FInanceஇன் 'அபே கெதர அவுருது' டிஜிட்டல் தள விளையாட்டுப் போட்டி வேலைத் திட்டமானது இந்த மாதம் இறுதிவரை நடைபெறுவதனால் இன்னும் பலருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. இதனூடாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு கவர்ச்சியான பல பரிசில்களும் வழங்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
HNB FINANCE LIMITED நிறுவனம் 2000ஆம் ஆண்டு, பதிவு செய்யப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நிதிக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட பலமான நிதி நிறுவனமாகும். என்பதுடன் நிதித் துறையில் சர்வதேச விருதினை வென்ற HNB FInance நிறுவனத்திற்கு 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையங்களின் ஊடாக நாடுமுழுவதிலும் தமது சேவையை வழங்கி வருவதோடு HNB FInance சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இணையத்தளத்தின் மூலம் நிதி உதவிகளை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது. லீசிங், வர்த்தகக் கடன், நுண்நிதிக் கடன், தங்கக் கடன், சிறுவர்களுக்கான நிலையான வைப்பு, வீட்டுக் கடன், மேற்படிப்பிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் HNB FInance நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago