Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 09 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச அதிவேக சேவை வழங்குநரான DHL Express, மனித வள நிறுவனங்களான Aon Hewitt, Top Employers Institute மற்றும் Great Place to Work® Institute மூலமாக ஆசிய பிராந்தியத்தில் முன்னணி தொழில் வழங்குநராகவும், பணிபுரிவதற்கேற்ற சிறந்த பணியிடங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட 24 விருதுகளை விடவும், இந்த ஆண்டு மொத்தமாக 28 விருதுகளை DHL Express வென்றுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மிகச்சிறந்த பணியிடச் சூழலை வழங்கல் மற்றும் எமது சக ஊழியர்களின் தொழில் அபிலாஷைகளை நிறைவேற்றுவதை அங்கிகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இவ்விருதுகள் குறித்து நாம் மிகவும் பெருமையடைகிறோம். DHL ஆகிய நாம், எமது ஊழியர்களை எமது பெறுமதி வாய்ந்த சொத்தாக கருதுவதுடன், ஒவ்வொருவரும் எமது வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியுள்ளனர்” என ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான DHL Expressஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி கென் லீ தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக DHL விருதுகளை வென்றெடுக்கவும், “சர்வதேச அதிவேக சேவை வழங்கலில் தொழிற்றுறை ஜாம்பவானான எமது ஸ்தானத்தை உறுதியாக்குவதற்கும் எமது ஊழியர்களே காரணம்” என அவர் குறிப்பிட்டார்.
Great Place to Work® Institute மூலமாக “ஆசியாவின் மிகச்சிறந்த பன்னாட்டுப் பணியிடங்களுக்கான விருதினையும், ” 2016இன் சிறந்த பணியிடத்துக்கான விருதினையும் DHL Express ஸ்ரீ லங்கா நிறுவனம் வென்றெடுத்துள்ளது. நாட்டின் பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியில் பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் ஒன்றாக DHL Express ஸ்ரீ லங்கா தெரிவு செய்யப்பட்டமை பெருமைக்குரிய விடயம் எனவும், இத்தகைய விருதுகள் தொழிற்றுறையில் எம்மை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் என தாம் நம்புவதாகவும், DHL Express ஸ்ரீ லங்காவின் இலங்கைக்கான பிரதம தலைமையதிகாரி திமித்ரி பெரேரா தெரிவித்தார்.
விருது வென்ற உள்ளக பயிற்சி திட்டங்கள், சான்றளிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்கள் (CIS) மற்றும் சான்றளிக்கப்பட்ட சர்வதேச முகாமையாளர் (CIM) போன்ற திட்டங்களை உலகளவில் 220 நாடுகளுக்கும் மேற்பட்ட 90,000 ஊழியர்கள் இந்த நிறுவனம் மத்தியில் முன்னெடுத்து வருகிறது. நிறுவனத்தின் மூலோபாயங்கள்,அடிப்படைகள் மற்றும் முகாமைத்துவ திறன்கள் போன்றவற்றின் அடிப்படையில் ஊழியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
CIS மற்றும் CIM போன்ற திட்டங்களுக்கு மேலதிகமாக, ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலான திட்டங்களை வழக்கமாக ஒழுங்கு செய்து வருவதுடன், “ஊழியர்களைப் பாராட்டும் வாரங்கள்” மற்றும் “வருடத்துக்கான சிறந்த ஊழியர்” போன்ற கௌரவிக்கும் நிகழ்வுகளையும் இந்த நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
36 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
2 hours ago