Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மே 19 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியால் இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டமைப்பினூடாக, இணைய வர்த்தகங்களுக்கான அணுகல் வசதி சிறிய வணிகங்களுக்கு மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது. 'கொம்பாங்க் சிம்பிள் பே' (ComBank Simple Pay) எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சேவையானது, சிறிய - நடுத்தரத் தொழில்முயற்சிகளுக்கு வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை இன்னொரு முறை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது.
மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் 'சிம்ப்ளிஃபைட் கொமேர்ஸ்' (Simplified Commerce) என்பதன் இலங்கை வடிவமாக 'கொம்பாங்க் சிம்பிள் பே' அமைந்துள்ளது. மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் சேவை, தெற்காசியாவில் முதன்முறையாக வங்கியாலேயே தொடங்கிவைக்கப்பட்டிருந்தது.
இலங்கையைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்கள் இப்போது இணையத்தள உருவாக்கத்துக்கும் வடிவமைத்தலுக்கும் மிகப்பெரியளவு தொகையைச் செலவிடாமலேயே தமது இணைய அங்காடியை (online store) உருவாக்க முடியும். வணிகங்களை டிஜிட்டல்மயப்படுத்த வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய வர்த்தகத் தீர்வின் காரணமாகப் பொருட்களை விற்றல், இலத்திரனியல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளல், தமது வணிக வாய்ப்புகளைக் குறிப்பிடத்தக்களவு மேம்படுத்திக் கொள்ளல் ஆகிய வாய்ப்புகளை வணிக நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன.
வணிகத்தின் பெயரைத் தாங்கும் விலைச்சிட்டைகளை அனுப்பும் வாய்ப்பை வழங்கும் இலத்திரனியல்; விலைச்சிட்டைகள், மீளநிகழும் (recurring) கொடுப்பனவுகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு, சமூக ஊடகத் தளங்கள் மூலமாகப் பொருட்களையும் சேவைகளையும் விற்கும் வாய்ப்புப் போன்றன, 'கொம்பாங்க் சிம்பிள் பே' வழங்கும் சிறப்பான வசதிகளுள் உள்ளடங்குகின்றன. இத்தளமானது பாதுகாப்பான முறையில் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியைக் கொண்டிருப்பதோடு, செலுத்தாமல் காணப்படும் விலைச்சிட்டைகளைக் குறித்துவைக்கவும் நினைவூட்டல்களைக் குறிப்பிட்ட இடைவெளியில் அனுப்புவதற்காகவும், அனைத்து விலைச்சிட்டைகளினதும் மேலோட்டத்தையும் வழங்குகிறது.
கணக்கீட்டுத் தளங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கான தரவுகளைத் தரவிறக்கம் செய்யும் வசதியை இது கொண்டிருப்பதால், கணக்கிடல் ஒருங்கிணைப்புக்கான வசதியையும் கொண்டுள்ளது. கொடுப்பனவுக்கான கட்டுப்பாட்டகம் (dashboard) ஒன்றும் காணப்படுவதன் காரணமாக, சமீபத்திய கொடுக்கல் - வாங்கல் நிலைமையையும் பணப்பாய்ச்சல் மேலாய்வையும் மீளாய்வு செய்யக்கூடியதாகக் காணப்படுகிறது. கொடுப்பனவுத் திட்டங்களுக்குத் தேவையான கொடுப்பனவு அட்டைத் தொழிற்றுறையின் தரவுப் பாதுகாப்பு நியமத்தின் (Payment Card Industry Data Security Standard - PCI-DSS) சான்றிதழுக்கு இயைபானதாக இக்கட்டமைப்புக் காணப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago