Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட அமெரிக்காவின் முன்னணி கடல் உணவு தரப்படுத்தல் அமைப்பான Monterey Bay Aquarium Seafood Watch - இனால் முதன் முறையாக இலங்கையின் இரு வகையான கடலுணவு வகைகள் நுகர்வோருக்கு சிறந்ததென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த Monterey Bay Aquarium Seafood Watch - அமைப்பால் நுகர்வோருக்கும் வியாபாரங்களுக்கும் ஆரோக்கியமான வகையில் நிலைபேறான வகையில் பிடிக்கப்படும் மீன்வகைகளை இலகுவாக தெரிவுசெய்து கொள்வதற்கான பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட சூழலுக்கு நட்பான கடலுணவு வகைகள் வட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளில் அதிகளவு வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த சூழல் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு அக்கறை செலுத்தும் நுகர்வோர்கள், அதிகளவு விலை கொடுத்து நிலைபேறான வகையில் பிடிக்கப்படும் மீன் உணவுகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாவனைக்கு சிறந்ததென பரிந்துரைக்கப்பட்டுள்ள கடல் உணவு வகையில் பாக்குநீரிணை பகுதியில் அதிகளவு காணப்படும் அரிய இனமான நீல நீச்சல் நண்டு (Portunus pelagicus) இனம் அடங்கியுள்ளது.
இது நாட்டின் மன்னார் கடற்கரை மற்றும் வட பிராந்திய கடற்கரை பகுதியில் அதிகளவு பிடிக்கப்படுகிறது. இவற்றின் நிலைபேறாண்மை உறுதி செய்யப்பட்டு அவை பிடிக்கப்படுவதால் Monterey Bay Aquarium Seafood Watch - அமைப்பினால் பாவனைக்கு சிறந்ததென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைப்பைத் தொடர்ந்து இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு உயர் தர சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதுடன், இந்த உணவு வகைகளை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும். இதனூடாக உயர் வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago