S.Sekar / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக பைசல் சாலி 2023 பெப்ரவரி 20 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றார்.

சாலி தற்போது இலங்கை இயக்குநர்கள் நிறுவகத்தின் தலைவராக உள்ளார், இது தனியார் மற்றும் அரச துறைகளைச் சேர்ந்த பணிப்பாளர்களுக்கு நுண்ணறிவு மற்றும் திறன்களைக் கொண்டு அவர்களின் கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கும் புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு நிறுவகமாகும்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவையில் 40 வருடங்களுக்கும் மேலான விரிவான அனுபவத்தைக் கொண்ட சாலி, ANZ Grindlays வங்கியில் கூட்டாண்மை மற்றும் வணிக வங்கியியலின் தலைவராகவும் NDB வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாகவும் இருந்தார். மேலும் NDB வீடமைப்பு வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அமானா வங்கியின் ஸ்தாபகர், முகாமைப்பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் காகில்ஸ் வங்கி மற்றும் HNB ஜெனரல் இன்சூரன்ஸின் சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.
இலங்கையில் இலாப நட்டப் பகிர்வு மாதிரியில் செயற்படும் முதல் வட்டி முறைமையில்லாத, உரிமம் பெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கியை ஸ்தாபிப்பதில் சாலி பிரதான பங்காற்றியிருந்தார்.
வங்கியியல், நிதி, காப்புறுதி, நிதி முகாமைத்துவம், பங்குத் தரகு, உற்பத்தி, வர்த்தகம் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்களின் சபைகளின் பணிப்பாளர் பதவிகளை வகித்துள்ளார் மேலும் அவர் அரச பல்கலைக்கழக சபைகள், இலங்கை வர்த்தக சம்மேளனம், அரசு மற்றும் அரசு சாரா நிதி, பொருளாதார விவகாரங்கள், வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி ஆகிய துறை குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.
சாலி வங்கியியல் மற்றும் நிதித்துறையிலில் நிபுணத்துவ பொருளாதார பட்டப்படிப்பில் முதல் தரப் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் அவர் MBA மற்றும் FCPM தகைமைகளையும் கொண்டுள்ளார்.
24 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
43 minute ago