Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்ற ஆசிய இளம் வடிவமைப்பாளர்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாகத் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த இலங்கையின் இரு இளம் வடிவமைப்பாளர்களுக்கு, மலேசியாவில் நடைபெற்ற ‘பிராந்திய ஆசிய இளம் வடிவமைப்பாளர் மாநாடு 2017 / 18’ நிகழ்வில் பங்கேற்பதற்கான அனுசரணையை நிபொன் பெயின்ட் வழங்கியிருந்தது.
கட்டடக்கலை பிரிவில் தங்க விருதை வென்ற மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் திலுஷன் கொடிகார மற்றும் உள்ளக வடிவமைப்பு பிரிவில் தங்க விருதை வென்ற கட்டடக்கலைக்கான சிற்றி ஸ்கூலின் சச்சிந்த பெர்னான்டோ ஆகியோர் ஆசிய நாடுகளிலிருந்து பங்கேற்றிருந்த 14 அங்கத்தவர்களுடன் இணைந்து கொண்டனர். இந்த மாநாடு நான்கு நாட்கள் நடைபெற்றன.
நிபொன் பெயின்ட் அனுசரணை வழங்கியிருந்த இந்த நிகழ்வில், பயிற்றுவிப்பு அமர்வுகள், துறைசார் நிபுணர்களின் விழிப்புணர்வூட்டும் உரைகள் மற்றும் கட்டடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு கல்விசார் சுற்றுலாக்கள் போன்றன அடங்கியிருந்தன.
‘நாளைக்காக நீங்கள்’ எனும் தொனிப்பொருளில் அலங்கார கொள்கைகளை பங்குபற்றுநர்கள் வடிவமைத்து, அவற்றை ஆசியாவின் 56 புகழ்பெற்ற மத்தியஸ்தர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். இதிலிருந்து ‘ஆண்டின் சிறந்த ஆசியாவின் இளம் வடிவமைப்பாளர்’ விருதுக்காக போட்டியிட்டிருந்தனர்.
இந்த மாநாடு தொடர்பில் நிபொன் பெயின்ட் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜா ஹேவாபோவல கருத்துத் தெரிவிக்கையில், ‘பிராந்திய மட்டத்தில் நிபொன் பெயின்ட் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதுடன், ஆசியாவில் இந்த அலங்காரத் திறமைகளை ஊக்குவித்து வருகிறது.
அத்துடன், பிராந்தியத்தில் காணப்படும் இளம் நிபுணர்கள் மத்தியில் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது.
இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியாவின் இளம் வடிவமைப்பாளர் விருது (AYDA) வழங்கும் நிகழ்வில், இலங்கையின் இளம் வடிவமைப்பாளர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததை நாம் அவதானித்தோம்.
இதிலிருந்து சிறந்தவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு மலேசியாவில் இடம்பெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாம் அனுசரணை வழங்கியிருந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
இவர்கள் இலங்கைக்கு பெருமளவு அறிவை கொண்டு வருவார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், இலங்கையின் வடிவமைப்பாளர்களுக்கு உயர்ந்த நிலையை எய்துவதற்கு உதவக்கூடிய நட்புகளை மேம்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார். ஆசிய இளம் வடிவமைப்பாளர் மாநாடு 2017 / 18 நிகழ்வில் பெருமளவான சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பேச்சாளர்கள் தமது உரைகளை ஆற்றியிருந்ததுடன், பங்குபற்றுநர்களுக்கு அலங்காரம் மற்றும் கட்டடக்கலை பற்றிய வெவ்வேறு தலைப்புகள் பற்றிய விளக்கங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தனர்.
25 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago