2025 மே 08, வியாழக்கிழமை

உள்நாட்டு சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு செலான் வங்கி தொடர்ச்சியாக வலுவூட்டல்

S.Sekar   / 2022 ஒக்டோபர் 14 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதித் துறையில் சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள் கொண்டுள்ள பெருமளவான வாய்ப்புகளைக் கவனத்தில் கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவதற்காக, அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிப் பட்டறையை முன்னெடுத்திருந்தது. சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கான இந்த பயிற்சிப்பட்டறையை இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து முன்னெடுத்திருந்தது.

சிறிய நடுத்தரளவு வியாபாரங்களின் மீது செலான் வங்கி பெருமளவில் கவனம் செலுத்துவதுடன், வழமையான கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று, இந்தத் துறையின் ஏற்றுமதி சார் வாய்ப்புகளில் அதிகளவு கவனம் செலுத்த முன்வந்துள்ளது.  சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் பிரகாரம், ஒரு மில்லியனுக்கு அதிகமான சிறிய நடுத்தரளவு வியாபாரங்களைக் கொண்ட இந்தத் துறை, அனைத்து வியாபாரங்களின் 75 சதவீதத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையின் பெருமளவான பொருளாதாரத்தின் பங்கையும் கொண்டுள்ளது. மேலும், இலங்கையின் 45சதவீதமான தொழில் புரிவோர், இந்த சிறிய நடுத்தரளவு வியாபாரங்களின் வினைத்திறனான செயற்பாடுகளில் தங்கியுள்ளன. உற்பத்தித் துறையைச் சேர்ந்த பல சிறிய நடுத்தரளவு வியாபாரங்களில், பெருமளவானவை மறைமுகமாக ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இவை சர்வதேச சந்தைகளில் பிரவேசிப்பதில் ஆர்வத்தைக் கொண்டுள்ள போதிலும், ஏற்றுமதி சார் செயற்பாடுகள் மற்றும் நிதித் திட்டமிடல் தொடர்பில் போதியளவு அறிவு இன்மை போன்றன அச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடையாக அமைந்துள்ளன. துறைகள் தொடர்பான நிபுணத்துவ அறிவைக் கொண்டுள்ள செலான் வங்கி, ஏற்றுமதிச் சந்தையில் பிரவேசிக்க எதிர்பார்க்கும் இவ்வாறான சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்க தயாராகவுள்ளது. இந்த ஆதரவு மற்றும் ஊக்குவிப்பினூடாக, சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் ஏற்றுமதித் துறைக்கு ஊக்கமளிக்கப்படுவதுடன், பல வழிகளில் அந்நியச் செலாவணியை ஈட்டி, தேசிய பொருளாதாரத்தையும் வலிமைப்படுத்துவதாக அமைந்திருக்கும்.  

ஏற்றுமதி மீளாய்வு, சந்தை ஆய்வு மற்றும் சந்தை அணுகல் போன்ற முக்கியமான தலைப்புகள் பற்றி பயிற்சிப் பட்டறையில் கலந்தாலோசிக்கப்பட்டிருந்தது. சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு ஏற்றுமதிப் பயணம் மற்றும் பரிபூரண ஏற்றுமதி தந்திரோபாயத்தை திட்டமிடவும், சர்வதேச சந்தையில் பிரவேசிப்பதற்கும் உதவியிருந்தது. மேலும், இந்த பயிற்சிப் பட்டறையின் போது, பங்குபற்றுநர்களுடன் கொடுப்பனவு முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் இடர்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், செலான் வங்கியில் காணப்படும் சம்பந்தப்பட்ட நிதிச் சேவைகளின் அறிமுகமும் வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பயிற்சிப்பட்டறையை VSSL Global Pvt. Ltd. பணிப்பாளரும், இணை ஸ்தாபகரும், சர்வதேச நிபுணர், கூட்டாண்மை பயிற்றுவிப்பாளர், C-நிலை நிறைவேற்று பயிற்றுவிப்பாளர் மற்றும் விரிவுரையாளருமான 20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்ட உபுல் திசாநாயக்க முன்னெடுத்திருந்ததுடன், செலான் வங்கியின் சிரேஷ்ட வங்கியியல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

செலான் வங்கியின் கிளை கடன் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ரணில் திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள் அமைந்துள்ளன என்பதை செலான் வங்கி புரிந்து கொண்டுள்ளது. இந்த துறையை மேலும் கட்டியெழுப்புவதை நோக்கி செயலாற்றுவதுடன், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் நாம் இனங்கண்டுள்ளோம். எமது சிறிய நடுத்தரளவு வியாபார சந்தையினால் விசேடத்துவமான தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், முறையாக வழிகாட்டப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டால், அடுத்த நிலைக்கு மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். எமது பயிற்சிப் பட்டறைகளினூடாக, அவர்களுக்கு வியாபாரங்களை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், உள்ளார்ந்த தகவல்கள், அறிவு மற்றும் முக்கியமாக நிதித் தீர்வுகளுடன் ஏற்றுமதிச் சந்தையை கையகப்படுத்தி தமது பயணத்தைத் தொடரக்கூடியதாக இருக்கும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X