2025 ஜூலை 17, வியாழக்கிழமை

எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்க இலங்கை வங்கி கைகோர்ப்பு

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் இளைஞர்களுக்கு தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இலங்கை பௌதிகவியல் - SLJSO உடன் கைகோர்த்து இந்தோனேசியா, நெர்லாந்து, பொட்ஸ்வானா ஆகிய நாடுகளில் இடம்பெறும் சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட்ஸ் - IJSO நிகழ்வில் பங்கேற்கும் இலங்கை அணியினருக்கு அனுசரணை வழங்க முன்வந்திருந்தது.

2018 டிசெம்பர் மாதம் பொட்ஸ்வானாவில் இடம்பெற்ற 15ஆவது சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட்ஸ் நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு வெண்கல விருதுகள் கிடைத்திருந்தன. இந்நிகழ்வில் 44 நாடுகளின், 48 அணிகள் பங்கேற்றிருந்தன. 

ஒவ்வொரு ஆண்டிலும் இலங்கை ஆறு மாணவர்களுடன் IJSO நிகழ்வில் பங்கேற்பதுடன், இவர்களுக்கு பயிற்சிகளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வழங்குகின்றனர்.

இலங்கை சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட்ஸ் நிகழ்வினூடாக இந்தச் சர்வதேச நிகழ்வுக்கு பங்கேற்கும் உள்நாட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

மாகாண மட்டத்தில் இடம்பெறும் இந்த போட்டிகளுக்கும், இலங்கை வங்கி அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X