2022 ஜூலை 04, திங்கட்கிழமை

கொமர்ஷல் வங்கி தகவல் தொழில்நுட்பக் கூடங்கள் அன்பளிப்பு

S.Sekar   / 2022 ஜூன் 20 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல வசதிகளும் கொண்ட மேலும் நான்கு தொழில்நுட்பக் கூடங்களை கொமர்ஷல் வங்கி பாடசாலைகளுக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் மூலம் மேலும் 7600 மாணவர்கள் தமது தகவல் தொழில்நுட்ப பாடங்கள் சம்பந்தமான செய்முறை பயன்களைப் பெறவுள்ளனர்.

கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியம் இதுவரை 243 தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை, தேவைகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. வங்கியின் தகவல் தொழில்நுட்ப கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன.

முதலிந்து டேவிட் மெண்டிஸ் மகா வித்தியாலயம் திம்பிரிகஸ்கட்டுவ, போலவலன நிமல மரியா மகா வித்தியாலயம் நீர்கொழும்பு, ஹரிஸ்சந்திர கல்லூரி நீர்கொழும்பு, கம்பளை தேவி பாலிகா வித்தியாலயம் ஆகிய தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பாடவிதானத்தை உள்ளடக்கிய பாடசாலைகளுக்கு இந்த ஆய்வுகூடங்கள் வழங்கப்பட்டன. தேசிய ரீதியாக கணனிக் கல்வியை மேம்படுத்தும் வகையிலும், மாணவர்களின் டிஜிட்டல் கற்கை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில் இவை வழங்கப்பட்டுள்ளன.

கொமர்ஷல் வங்கியின் இந்த முதலீடானது ஏற்கனவே உள்ள தகவல் தொழில்நுட்பக் கூடங்களை புனரமைத்தல் மற்றும் விரிவாக்கல் என்பனவற்றையும் உள்ளடக்கியது. தகவல் தொழில்நுட்பக் கூடத்துக்கு தேவையான கணனிகள், மேசைகள், கதிரைகள், அச்சு இயந்திரங்கள் அவற்றுக்குத் தேவையான மேசைகள், மல்டிமீடியா புரொஜக்டர்கள் என்பன இந்தத் திட்டத்தின் கிழ் அன்பளிப்புச் செய்யப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .