2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு கொமர்ஷல் வங்கி விருது

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்றுச் சாதனை படைத்த ஆறு பேருக்கு கொமர்ஷல் வங்கி, மொத்தம் 535,000 ரூபாயை பரிசாக வழங்கி கௌரவித்திருந்தது.   

வங்கியின் சிறுவர் சேமிப்புக் கணக்குத் திட்டமான ‘அருணலு’ மூலமாக இந்த வெகுமதிகள் வழங்கப்பட்டன. 

பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.  

முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட புமித் மெதுல் விதானகே, சனூபா திமத் பெரேரா ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் கொமர்ஷல் வங்கியால் வழங்கப்பட்டது.

நதி நவாஸ்கன், மகேந்திரன் திகலோலிபவன் ஆகிய இரண்டாம் இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு தலா 150,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. வங்கியின் ‘அருணலு’ கணக்கை இவர்கள் இருவரும் கொண்டிருந்ததால், அவர்களுக்கு இந்த மேலதிக தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது.

செனுஜி அகிம்தா ஹெட்டிஆரச்சி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மூன்றாவது மாணவியாவார். அவருக்கு 35,000 ரூபாய் வழங்கப்பட்டது.

தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற ஹர்திக் ஹன்சுஜா பாலகுமாருக்கு ‘அருணலு’ கணக்கு வைப்பாளராக இருக்கும் காரணத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.  

இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரு நிகழ்வு ITN அலுவலகத்திலும் மற்றைய நிகழ்வு யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது.  

கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பரிசு வழங்குவதையும் வங்கியின் தனியார் வங்கிப் பிரிவு III இன் உதவிப் பொது முகாமையாளர் திருமதி. தர்ஷனி பெரேரா ITN நிகழ்வில் பரிசு வழங்குவதையும் படத்தில் காணலாம்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X