Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
Business Today இன் 2018-2019 ஆம் ஆண்டுக்கான Top 30 பதிப்பில் மூன்றாவது பெருமைக்குரிய இடத்தை LOLC நிறுவனம் தனதாக்கியிருந்தது. Business Today Top 30 விருதுகள் விழாவானது, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதமர், மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்திருந்தார். இலங்கையின் Top 30 கூட்டு நிறுவனங்களால் அடைவுக்கான வெற்றியை கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்கவர் மாலை நேர பிரமாண்டமான வைபவத்தில் சிறப்பு அதிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
Business Today இனது 2018-2019 ஆம் ஆண்டுக்கான Top 30 பதிப்பிற்கு அமைவாக, நீண்டகால நோக்குடன் மூலோபாய அமைவிடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலத்திற்கேற்ற முதலீடுகளே LOLC குழுமம் மூன்றாம் இடத்தைச் சுவீகரித்துக் கொண்டமைக்கு பிரதான காரணமாக விளங்கியது. LOLC ஃபினான்ஸ் PLC, கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் PLC மற்றும் LOLC டிவலப்மன்ட் ஃபினான்ஸ் PLC ஆகிய அதன் மூன்று நிதி நிறுவனங்களினதும் உறுதியான வளர்ச்சியானது, LOLCஐ தரப்படுத்தலில் உச்சத்துக்கு கொண்டுசெல்வதற்கு பங்களிப்பு செய்திருந்தது. கம்போடியா, மியன்மார், பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட LOLC யினது மூலோபாய கடல்கடந்த முதலீடுகளும் குழுமத்தினை தொடர்ச்சியாக வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு பெரிதும் செல்வாக்கு செலுத்திய முக்கிய காரணிகளாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago