Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2023 ஜனவரி 06 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்பு வழங்கக்கூடிய துறையாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை ஏற்றுமதியாளர்களை இனங்கண்டுள்ளது.
அந்நியச் செலாவணியில் வருமானமீட்டுவது என்பது பொருளாதாரத்தின் தற்போதைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அந்நியச் செலாவணி இருப்புகளின் வளர்ச்சியில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பங்களிப்பு பிரதான பங்களிப்பை வழங்கும் நிலையில், அவ்வாறு அனுப்பப்படும் பணத்தில் வீழ்ச்சி மற்றும் உத்தியோகபூர்வமற்ற சட்டவிரோதமான முறைகளில் வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்பும் முறைகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் வருமான மூலங்களிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஏற்றுமதியை அதிகரிப்பதனூடாக, இந்த செயன்முறையை வலுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
செயற்பாடுகளுக்கான பிரதி பொது முகாமையாளர் மலிக் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையை இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீட்பதில் உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. எனவே, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைத் துறையில், ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதை செலான் வங்கி இலக்காகக் கொண்டுள்ளது. அதனூடாக, இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க ஆதரவளிக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
விக்ரமநாயக்க தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், “உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் மீது கவனம் செலுத்த வேண்டியதை நாம் இனங்கண்டிருந்தோம், ஏனெனில் அதில் அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும், ஏற்றுமதித் துறையில் பிரவேசிக்கும் பெருமளவான சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு சிறந்த செயற்பாடுகள் மற்றும் தமது வியாபாரங்களை விரிவாக்கம் செய்வது தொடர்பில் போதியளவு வழிகாட்டல்கள் சில சந்தர்ப்பங்களில் வழங்கப்படுவதில்லை. எனவே, ஏற்றுமதியில் ஈடுபடும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு அறிவூட்டி, வெளிநாட்டு கொள்வனவாளரின் தெரிவுக்குரிய வியாபார பங்காளராகத் திகழக்கூடிய வகையில் வலுவூட்டும் நடவடிக்கைகளை வங்கி முன்னெடுத்திருந்தது.” என்றார்.
ஏற்றுமதிச் சங்கிலி அடங்கலாக, வெளிநாட்டு தொடர்பாளர்களுடன் தொடர்பாடல்களை பேணும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு தமது வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் அதிகளவு வெற்றிகரமாக இயங்கக்கூடியதாக இருக்கும். அதன் காரணமாக அறிவு பகிர்வு மற்றும் நிபுணத்துவத்தை கட்டியெழுப்புவது போன்றன அத்தியாவசியமாக அமைந்துள்ளன. விக்ரமநாயக்கவின் தலைமையின் கீழ், செலான் வங்கியின் வர்த்தக அணியினால், பாரம்பரிய முறைகளுக்கு அப்பாலான ஏற்றுமதி வாய்ப்புகளை இனங்காணப்பட்டிருந்ததுடன், தமது சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சி ஏற்றுமதியாளர் பிரிவுகளில் கறுவா, தேயிலை, கடலுணவு மற்றும் ஆடைத்தொழிற்துறை போன்ற தெரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விக்ரமநாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில், “ஏற்றுமதித் துறைக்கு சில நிறுவனங்கள் புதிதாக ஈடுபட ஆரம்பித்துள்ளதால், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை இலக்கு வைக்கப்பட்டு ஆலோசனை வழங்கும் பணியை எமது பிரிவு முன்னெடுக்கின்றது. வழிகாட்டலினூடாக, அவர்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வது, ஏற்றுமதி பேரம்பேசல் மற்றும் கப்பலில் சரக்குகள் ஏற்றிய பின்னர் நிதி உதவிகள் முதல் ஏற்றுமதிக்கு அவசியமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்தல் வரை வங்கி தனது நிபுணத்துவத்தை சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.” என்றார்.
மேலும், அதிகளவு தொழில்நுட்ப உள்ளம்சங்களைக் கொண்ட வர்த்தகம் என்பதால், பல சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சிகளுக்கு ஒரு தடையாக அமைந்திருக்கக்கூடும் என்பதால், செலான் வங்கியினால் பரிபூரண ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன. வர்த்தக செயன்முறையில் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய உதவிகளை பெற்றுக் கொள்வதுடன், ஆவணப்படுத்தல் மற்றும் சரியான ஏற்றுமதி சந்தைகளை கையகப்படுத்தல் போன்ற தமது வியாபார செயற்பாடுகளை முன்னெடுக்க அவசியமான வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.
58 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
59 minute ago
2 hours ago