Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2023 ஏப்ரல் 17 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலி நீக்கும் நிவாரணியான IODEX, அண்மையில் சிவனொளிபாத ஆலய வளாகத்தில் “IODEX சுவசஹன” எனும் சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இதன் போது, சிவனொளிபாத மலைக்கு விஜயம் செய்திருந்த ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களின் வலிகளுக்கு நிவாரணத்தை வழங்கியிருந்தது.
”வலி உங்களுக்கு தடையாக அமைந்திட இடமளிக்காதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ், ஆறு வருடங்களுக்கு முன்னதாக ஆரம்பமாகிய இந்த “IODEX சுவசஹன“ எனும் சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம், அக்காலப்பகுதியினுள் நாட்டின் பல்வேறு சமய, கலாசார நிகழ்வுகளின் போது யாத்திரிகர்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வகையில் செயலாற்றியிருந்தது. இம்முறை சிவனொளிபாத யாத்திரைக்கு வருகை தந்திருந்த யாத்திரிகர்களின் தலைவலி, கழுத்து வலி, மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி போன்ற உடல்சார் வலிகளால், யாத்திரையை மேற்கொள்வதில் எழக்கூடிய இடையூறுகளை குறைத்து, மலைஉச்சிக்கு சென்று, வழிபாட்டைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பது “IODEX சுவசஹன” சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாக அமைந்திருந்தது.
அதன் பிரகாரம், களைப்படைந்திருந்த யாத்திரிகர்களுக்கு, ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த IODEX சுவசஹன கூடத்தினுள் இலவசமாக கால்கள் மற்றும் தலை மசாஜ்களை வழங்கியது. மேலும், GSK நிறுவனத்தின் பிரதான வர்த்தக நாமங்களில் ஒன்றான பனடோல், யாத்திரிகர்களின் உடல்வலியை தணிப்பதற்கு பனடோல் மாத்திரைகளை இலவசமாக விநியோகித்திருந்தது.
மேலும், “IODEX சுவசஹன”, சிவனொளிபாத மலைக்கு பயணிக்கும் யாத்ரீகர்களுக்கு, குறிப்பாக வயதானவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு உதவ ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது. மேலும், இந்த அணியினால், சிவனொளிபாத யாத்திரையின் போது, காயங்களுக்கு உள்ளாகும் யாத்திரிகர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
GSK நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகள் செயற்பாடுகளுக்கான பொறுப்பதிகாரி சானக வன்னியாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த ஆறு வருட காலமாக நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமய மற்றும் கலாசார நிகழ்வுகளில் சுவசஹன வலி நிவாரணப் பகுதிகளை நிறுவி, பக்தர்களின் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கி வருகின்றோம். மிஹிந்தலை, கதிர்காரம், நல்லூர் போன்ற பகுதிகளில் விசேடமாக வெசாக் மற்றும் பொசொன் போன்ற பண்டிகைக் காலப்பகுதியில் ஒன்றுதிரளும் ஆயிரக் கணக்கான பக்தர்களின் நலன் கருதி இந்த நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கின்றோம். இந்நாட்டின் முன்னணி வலி நிவாரணி வர்த்தக நாமத்தினால் இது போன்ற சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க முடிந்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.” என்றார்.
சிவனொளிபாத நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தமிழ்-சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில், பொசொன் பௌர்ணமி காலத்தில் மிஹிந்தலையிலும், ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் நல்லூர் ஆலய திருவிழாவிலும், அதனைத் தொடர்ந்து சகல பௌர்ணமி தினங்களிலும் மற்றும் விகாரைகளை அடிப்படையாகக் கொண்டு, கலாசார நிகழ்வுகளின் பிரகாரம், IODEX இனால் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
41 minute ago
49 minute ago
58 minute ago