Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 02 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் கொவிட் 19 நோய் தொற்றுக்கு எதிராகப் போராடிவரும் சுகாதார துறைசார் வல்லுனர்களுக்கு தலைவணங்குவதாக சுகாதார விஞ்ஞானத்துக்கான சர்வதேச நிறுவனம் (IIHS) அறிவித்துள்ளது. வைரஸ் அதிக தொற்று வீதத்தைக் கொண்டிருந்த போதிலும் பரவலான சேவைகளை வழங்கிவரும் சுகாதாரக் குழுவினர் வீட்டிலிருந்து வேலைசெய்யும் ஆடம்பரத்தைக் கொண்டிருக்கவில்லை.
தாதியர்கள், வைத்தியர்கள், மருத்துவ பரிசோதனை தொழிநுட்பவியலாளர்கள், பிசியோதரபிஸ்ட் மற்றும் சுகாதார சேவையுடன் இணைந்த அனைவரும் இந்தப் பேரழிவில் தற்பொழுது முன்னணியில் நிற்கும் வீரர்களாகவுள்ளனர். தேவைப்படும் நேரத்தில் நோயாளிகளுக்கு அத்தியாவசிய சேவைகளையும் பராமரிப்பையும் ஊக்குவிக்கும் அதேவேளை, தனிப்பட்ட மட்டத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வல்லுனர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது மட்டுமல்லாமல் வீட்டிலுள்ள தமது குடும்ப உறுப்பினர்களின் உயிர்களையும் பயணம் வைத்துள்ளனர். உபகரணங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான அணுகல் இல்லாம உள்ளிட்ட மோசமான வளங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தன்னலமற்ற மற்றும் இரக்கமுள்ள செயல்களுக்காக எங்கள் அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுக்கும் பகிரங்கமாக நன்றிகூற இதைவிட பொருத்தமான சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் IIHS தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago