2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

செலான் வங்கியின் நிதி முகாமைத்துவ கற்கை நிகழ்வு

Freelancer   / 2023 ஜூன் 19 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிய நடுத்தர தொழில்முயற்சிகளின் வளர்ச்சிக்கு சாதகமான சூழல் ஒன்றை உருவாக்கும் அதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்துக்கு பக்கபலமாக இருப்பதற்கான தனது சளைக்காத அர்ப்பணிப்பை வலியுறுத்தி நிதி முகாமைத்துவ கற்கை நிகழ்வை திவுலபிட்டிய நகரில் அண்மையில் செலான் வங்கி ஏற்பாடு செய்திருந்தது.

100 க்கு மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வணிகத் தொழில் முயற்சியாளர்கள் தனிச்சிறப்பான நிபுணர் குழுவொன்று வழங்கிய உள்விடயங்களின் பயனைப் பெற்றுக்கொண்டனர். இக்குழுவில் SME வணிக ஆலோசகரும், முகாமைத்துவப் பட்டப்பின் கற்கை நிறுவகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வருகைதரும் பீட அங்கத்தவருமான பேரா. ரவி பமுனுசிங்க, இலங்கை வயம்ப பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேரா. விஷ்வஜித் கந்தேகம, செலான் வங்கியின் மீள்நிதிச்சேவை சிரேஷ்ட முகாமையாளர் செஹான் கன்னங்கர, மற்றும் செலான் வங்கியின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தரன கோரளே ஆரச்சி ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வு நிச்சயமாக அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். தொழில் முயற்சியாளர்கள் தமது வணிகங்களை அபிவிருத்தி செய்து விஸ்தரிப்பதற்கு உதவும் பலதரப்பட்ட முக்கிய விடயங்கள் பற்றிய தெளிவு பெற்றுத் தரப்பட்டதோடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றியும் விசேடமாக வலியுறுத்தப்பட்டது. முழு உலகமும் விற்பனையை அதிகரிப்பதற்காக டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கு நகர்ந்து வருவதனால், உறுதியான சமூக ஊடக மூலோபாயம் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் செயற்திறன்மிக்க முகாமைத்துவம் என்பவற்றின் அத்தியாவசிய பங்களிப்பு பற்றி உரையாடலில் ஆராயப்பட்டது. இதன்போது தொழில் முயற்சியாளர்கள் ஆர்வத்தை உருவாக்கல், பற்றிப்பிடித்தல் மற்றும் வளர்த்தல் ஆகிய படிகளின் ஊடாக தமது ஒன்லைன் இருப்பை மேம்படுத்தக்கூடிய பெறுமதியான உள்விடயங்கள் மற்றும் யதார்த்தமான அணுகுமுறைகளை அறிந்து கொண்டனர். 

இவற்றுக்கு மேலதிகமாக, நிபுணர் குழுவினர் செயற்திறன்மிக்க நிதியியல் முகாமைத்துவ வழிமுறைகள், புதிய சந்தைகளை ஊடுருவுவதற்கான பரிசீலிக்கப்பட்ட மூலோபாயங்கள் மற்றும் உலகளாவிய பாவனையாளர்களுக்கு வெற்றிகரமாக உற்பத்திகளை ஏற்றுமதி செய்தல் என்பன பற்றிய தெளிவையும் பெற்றுத்தந்தனர். இதன்போது அநேகமான சிறிய நடுத்தர வியாபாரங்களின் வங்கியாளர் தெரிவாகவுள்ள செலான், ஒரு வங்கியாக மீள்நிதி கடன்களுக்கான ஒதுக்கம் மற்றும் அவர்களது குறிப்பான தேவைகளுக்காக கட்டமைக்கப்பட்டுள்ள பல்வேறு கடன் திட்டங்களின் வரிசை என்பவை பற்றி விளக்கமளித்து இத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதிலுள்ள தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. நிதி ஒத்துழைப்பை பெற்றுத்தருவதன் ஊடாக, தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வாய்ப்புகளை அவர்கள் தவறவிடாமல் தொடர்ந்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடாத்துவதற்கு வழி செய்வதே வங்கியின் நோக்கமாகும். 

தேசத்தின் சிறிய நடுத்தர வியாபாரப் பிரிவுக்கு ஊக்கமளிப்பது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் என்பதில் செலான் வங்கி தீவிர நம்பிக்கை கொண்டுள்ளது. இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதத்திற்கு கணிசமானளவு பங்களிப்பை வழங்கக்கூடிய சாத்தியத்தை சிறிய நடுத்தர வியாபாரங்கள் கொண்டிருப்பதனால், அன்புடன் அரவணைக்கும் வங்கி அனைவருக்கும் சௌபாக்கியமிக்க நாடொன்றை உறுதி செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X