Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
S.Sekar / 2022 ஒக்டோபர் 07 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்யின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக ரமேஷ் ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக செலான் வங்கி அறிவித்துள்ளது. இந்த நியமனத்துக்கு முன்னதாக பிரதம செயற்பாட்டு அதிகாரியாக செயலாற்றியிருந்த ஜயசேகர, 2021 நவம்பர் மாதம் முதல் செலான் டிவலப்மன்ட்ஸ் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் திகழ்கின்றார்.
2011 ஆம் ஆண்டு பிரதம நிதி அதிகாரியாக செலான் வங்கியில் இணைந்து கொண்ட ஜயசேகர, 2016 ஆம் ஆண்டில், பிரதம இடர் அதிகாரி எனும் பொறுப்பை ஏற்றதுடன், 2018 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கூட்டாண்மை வங்கியியல் – பிரதி பொது முகாமையாளராக பணியாற்றியிருந்தார். 2020 ஜனவரி மாதம், இவர் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளராக பதவி உயர்வு செய்யப்பட்டு, 2021 ஆம் ஆண்டில், பிரதம செயற்பாட்டு அதிகாரி எனும் நிலைக்கு உயர்ந்திருந்தார்.
செலான் வங்கியுடன் இணைந்து கொள்ளும் முன்னதாக, பிரான்ஸ் வங்கியியல் முன்னோடியான BNP Paribas மத்திய கிழக்கு பிராந்தியத்தின் (பஹ்ரெய்ன், சவுதி அரேபியா, குவைட், கட்டார், துபாய், அபு தாபி மற்றும் சைப்பிரஸ்) பிரதி பிராந்திய நிதிக் கட்டுப்பாட்டாளராக பஹ்ரெய்னிலிருந்து இயங்கியிருந்தார். இலங்கை HSBC இல் இவர் நிதி மற்றும் திட்டமிடல் வதிவிட முகாமையாளராகவும், KPMG ஸ்ரீ லங்காவில் கணக்காய்வு முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் வங்கியியல், தந்திரோபாயத் திட்டமிடல், நிதி முகாமைத்துவம், இடர் மற்றும் கணக்காய்வு போன்றவற்றில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை இவர் கொண்டுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார். இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், இலங்கை பட்ட சந்தைப்படுத்தல் கல்வியகம், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் ஆகியவற்றின் அங்கத்தவராகவும் ரமேஷ் ஜயசேகர திகழ்கின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago