Gavitha / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.6 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு சற்று வீழ்ச்சியை காண்பித்திருந்த போதிலும், ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14.6 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. செப்டெம்பர் 30ஆம் திகதி வரை மொத்தமாக 1,508,405 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் செப்டெம்பர் மாதம் வரை 1,315,839 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2016 செப்டெம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து பெருமளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 7.8 சதவீத அதிகரிப்பை பதிவு செய்து 22,111 ஆக பதிவாகியிருந்தது. தெற்காசியாவிலிருந்து 361,065 சுற்றுலாப்பயணிகள் மற்றும் கிழக்கு ஆசியாவிலிருந்து 325,633 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர்.
4 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
4 hours ago