Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் காணப்படும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட முன்னணி ஆடை உற்பத்தியகமான ஒமெகா லைன், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஆடைத் தொழிற்துறை பிரிவில் ஏற்றுமதி சிறப்புகள் விருதை தனதாக்கியிருந்தது.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வு ஏற்றுமதியாளர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. கொழும்பு தாமரைத் தடாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றதுடன், இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார்.
பெண்களின் உள்ளாடைகள், காலுறைகள், இரவு ஆடைகள் மற்றும் நீச்சல் ஆடைகள் உற்பத்தியில் உலகப் புகழ்பெற்ற இத்தாலியின் Calzedonia S.p.A மேற்பார்வையின் கீழ் ஒமெகா லைன் குரூப் செயற்படுகிறது. Calzedonia வின் விற்பனை காட்சியறைகள் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன.
Calzedonia S.p.A இன் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இதர ஒமெகா லைன் கம்பனிகளில் சிரியோ லிமிட்டெட், படல்கம, அல்ஃபா அப்பரல்ஸ் லிமிட்டெட், பொல்கஹாவெல, பென்ஜி லிமிட்டெட், பிங்கிரிய மற்றும் வவுனியா அப்பரல்ஸ், வவுனியா ஆகியன அடங்கியுள்ளன. இந்த அனைத்து நிறுவனங்களிலும் 12,000 க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago