2025 ஜூலை 17, வியாழக்கிழமை

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி 25ஆவது வருட நிறைவை கொண்டாடியது

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனம் தனது வெள்ளிவிழா வருட கொண்டாட்டத்தை, கடந்த ஜனவரி 7ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 30 பிராந்திய அலுவலகங்கள், மடபாத்த மற்றும் பண்டாரகமவில் உள்ள வசதிகளை வழங்கும் வளாகங்கள் மற்றும் றண்ண பிரதேசத்திலுள்ள உற்பத்தித் தொகுதி உள்ளிட்ட சகல இடங்களிலும் பணியாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்தது.

மிகவும் எளிய முறையில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றாலும் கம்பனியின் ஆரம்பம் முதல் இணைந்திருக்கும் பணியாளர்களுக்கு மேடைகளில் முக்கிய இடம் வழங்கப்பட்டது.  

கடந்த 25 வருடங்களில் DPMC பல மைல்கற்களைக் கடந்தும், முதன்மைகளை நிலைநாட்டியும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை அடைந்துள்ளது. தலைவர் தனது ஆசிச் செய்தியில் விளக்கியது போல “விற்பனை செய்வது மாத்திரமன்றி, விற்பனையின் பின்னரான சேவைகள், எமது வாடிக்கையாளர்கள் எங்கு இருக்கின்றார்களோ அங்கு உதிரிப்பாகங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தியமையே எமது வெற்றியின் அடையாளம் என நான் நம்புகின்றேன்” என்று கூறியிருந்தார்.

DPMC நிறுவனமானது, இலங்கையின் வாகன சந்தையில் 34 சதவீத சந்தைப் பங்குடன் முன்னுரிமையில் இருக்கும் பாரிய வாகன நிறுவனமாகவுள்ளது. பஜாஜின் ஏக முகவராக உள்ள கம்பனி, சகல வீடுகளிலும் உச்சரிக்கப்படும் நாமமாகவும் மோட்டார் சைக்கிள்,  முச்சக்கர வண்டிகளுக்கான வர்த்தக நாமமாகவும் மாறியுள்ளது.

2018ஆம்  ஆண்டின் சிறந்த சர்வதேச மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியின் முதன்மையாளர் என்ற அடையாளத்தையும் கொண்டுள்ளது.   

குறைந்த செலவிலும், சிக்கனமான போக்குவரத்தை நாட்டில் அறிமுகப்படுத்தியதன் ஊடாக, சுயதொழில்வாய்ப்பு, தொழில் ஊக்குவிப்பு, தொழில்முனைப்பு என்பவற்றின் மூலம் மில்லியனுக்கும் அதிகமானவர்களை வலுப்படுத்தியிருப்பதுடன், பொருளாதார வளர்ச்சி என்பவற்றுக்கும் பங்களிப்புச் செலுத்தியுள்ளது.

புத்தாக்கம், தொழில்நுட்பம், வினைத்திறன் என்பவற்றைக் கூட்டிணைப்பதில் முன்னோடியான DPMC இலங்கையில் முதன் முதலில் ISO தரச்சான்றிதழைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது ஓட்டோமோட்டட் கென்வயர் முறையைக் கொண்ட தானியங்கித் தொழிற்சாலை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.   

ரிச்சட் பீரிஸ் மோட்டார் கம்பனி லிமிடெட் நிறுவனம் 1985ஆம் ஆண்டில் கூட்டிணைக்கப்பட்டது.  முகாமைத்துவம் முழுமையாக மாற்றம் செய்யப்பட்டதும் 1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பி​ரைவட்) லிமிெடட் என பெயர் மாற்றப்பட்டது.

நிறுவனம் 193 பணியாளர்களுடன் 1994ஆம் ஆண்டு DPMC தனது செயற்பாட்டை ஆரம்பித்தது. கம்பனி தற்பொழுது ஏறத்தாழ 1,000 பணியாளர்கள், 1,700க்கும் அதிகமான விற்பனை, சேவை, உதிரிப்பாகங்கள், விநியோகத்தர்களை நாடளாவிய ரீதியில் கொண்டுள்ளது. நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், சரக்குப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, இயற்கை விவசாய ஏற்றுமதி,  உள்ளூர் சந்தைக்கான இயற்கைப் பழரசம் என பன்முகப்படுத்தப்பட்ட டேவிட் பீரிஸ் குழுமத்தின் முன்னணி நிறுவனமாக DPMC காணப்படுகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X