2025 மே 19, திங்கட்கிழமை

தம்புள்ளை, வனவாசலவில் Ideal First Choice

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ideal குழுமத்தின் அங்கமான Ideal First Choice, எட்டாவது சேவை மய்யத்தை தம்புள்ளையிலும், ஒன்பதாவது மய்யம் வனவாசலவிலும் திறந்ததன் மூலம், தனது கிளை வலையமைப்பை மேலும் விஸ்தரித்துள்ளது. Mahindraவின் மோட்டார் சைக்கிள்கள் முதல் பிரைம் மூவர்ஸ் வரையான வாகனங்களுக்கான அதிகாரம்பெற்ற விநியோகஸ்தர்களான Ideal குழும நிறுவனங்களின் வர்த்தக முயற்சியே Ideal First Choice ஆகும்.

வெலிப்பென்னயில் உள்ள Mahindra KUV100 இற்கான, இலங்கையின் முதலாவது வாகன கூட்டுச் சேர்க்கும் தொழிற்சாலையின் இணை உரிமையையும் Ideal குழும நிறுவனங்கள் கொண்டுள்ளன.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சேவை மய்யங்கள், அதன் நன்கு பயிற்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த ஊழியர்களின் ஆதரவுடன், உலகத்தரம் வாய்ந்த விற்பனை சேவையை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுவரை, Ideal First Choice அதன் சிறகுகளை, தீவின் பெரும்பாலான பகுதிகளுக்கு விரிவுபடுத்தி, சிறந்த சேவையின் மூலம் மாற்றத்தைத் தொடர்கிறது. 

Ideal First Choice வியாபார முயற்சியானது, Ideal குழுமத்தின் தலைவர், நளின் ஜே.வெல்கம, குழுமத்தின் துணைத் தலைவர் அரவிந்த டி சில்வா ஆகியோரின் எண்ணக்கருவில் உருவானதென்பதுடன், Ideal Motors இன் Automotive பணிப்பாளர், சமிந்த வணிகரத்னவால் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. எதிர்காலத் தேவைகளுக்கேற்ற வகையிலான இந்த எண்ணக்கருவானது, எந்திர எண்ணெய் மாற்று சேவைகள், எந்திர திருத்த வேலைகள், குறிப்பிட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்புச் சேவை, மேற்பாகம், தீந்தை பூச்சு, மின்னியல் திருத்த வேலைகள், குளிரூட்டி திருத்த வேலைகள், சக்கரச் சீரமைப்பு, சக்கர சமநிலை, பிரதான வெளிச்ச விளக்கு தொடர்பான வேலைகள், கலப்பு எந்திர திருத்த வேலைகள், டயர் திருத்த வேலைகள், சேவைகள், வீதியோர உதவு சேவை அடங்கலாக மேம்பட்ட சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு அதி நவீன வசதிகளுடன் கூடிய சேவை நிலையங்களுடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X