2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘துடிப்பான எதிர்காலம், நீரிழிவை தடுப்போம்’ உடன் யூனியன் மனிதாபிமானம் கைகோர்ப்பு

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் சமூகப் பொறுப்புணர்வு வாய்ந்த வர்த்தக நாமமான ‘யூனியன் மனிதாபிமானம்’, தலசீமியா, நீரிழிவு, டெங்கு ஆகிய நோய்களைத் தவிர்த்துக் கொள்வது தொடர்பாக, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது. 

இந்த அனைத்துச் செயற்பாடுகளும் யூனியன் மனிதாபிமானம் - அறிவார்ந்த, ஆரோக்கியமான, வளமான எதிர்காலம் என்பதற்கமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.  

நீரிழிவை தவிர்ப்பது, கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யூனியன் மனிதாபிமானத்தினூடாக விசேட செய‌ற்றிட்டமொன்று ‘துடிப்பான எதிர்காலம், நீரிழிவை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் டிசெம்பர் 8ஆம் திகதி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்றது. 

இதில் 150க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர். புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களான நாரத, தனுஜா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, இந்தத் திட்டத்தினூடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தனர்.   

நீரிழிவு தவிர்ப்பு தொடர்பிலும், கட்டுப்படுத்துவது தொடர்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்தத் திட்டம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, இலவச நீரிழிவுப் பரிசோதனைகள், BMI பரிசோதனை, கண் பரிசோதனை, நீரிழிவு தொடர்பான அறிவுப் பகிர்வு அமர்வுகள் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான, சுகாதாரமான வாழ்க்கை முறையை முன்னெடுப்பதற்கு அவசியமான தகவல்களை வழங்கும் கூடங்களும் இதில் உள்ளடங்கியிருந்தன.   

இந்த நிகழ்வை வெற்றிகரமான முன்னெடுப்பதற்கு CDEM (Center for Diabetes Endocrinology and Cardio - Metabolism) முக்கிய பங்களிப்பை வங்கியிருந்தது. உத்தியோகபூர்வ மருத்துவ சேவை வழங்குநராக இயங்கியிருந்தது. Goyo, Awidinno மற்றும் Yaman ஆகியனவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுப்பது தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு வழிகாட்டியிருந்தன. Eat Right மூலமாக மக்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

ஒரு நாளுக்கு பொது மக்களுக்கு சீனி அடங்கிய பொருட்களை உட்கொள்வதிலிருந்து விலகி இருக்குமாறு கோரும் சவால் வழங்கலுடன் இந்த ‘துடிப்பான எதிர்காலம், நீரிழிவை தடுப்போம்’ நிகழ்ச்சி நிறைவடைந்திருந்தது.

இந்தச் சவாலை நாரத, தனுஜா ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். இந்தச் சவாலைப் பின்பற்றும் போது, அவர்கள் எதிர்கொண்டிருந்த தடைகள் பற்றிய விவரங்கள், யூனியன் அஷ்யூரன்ஸின் Facebook, Instagram, YouTube பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X