Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையை எதிர்கொள்வதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் செலிங்கோ லைஃப், அதன் அடுத்த அம்சமாக, வீட்டிலிருந்து வெளியே செல்லாமல், ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பு அல்லது ஓய்வூதிய முதலீடு ஆகியவற்றை வெறும் சில நிமிடங்களிலேயே பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் காப்புறுதித் துறையில் இலங்கையின் முன்னணி நிறுவனமான செலிங்கோ லைஃப், 'தொடுகையற்ற ஆயுள் காப்புறுதி' என அழைக்கும் இத்திட்டம் மூலமாக, சிக்கல்களில்லாத வகையில் இணைய ஆயுள் காப்புறுதி, ஓய்வூதியத் திட்டங்களை, நிறுவனத்தின் இணையத்தளத்தில் கொடுப்பனவுகளை மேற்கொண்டு பெற்றுக்கொள்ள வழிசமைத்துள்ளது.
இந்த முன்னெடுப்புக் காரணமாக, ஆயுள் காப்புறுதி அல்லது ஓய்வூதியம் ஆகிய முதலீட்டு வகைகளில் பங்குபற்ற விரும்புவோர், நிலைமை சாதாரணமாகும் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லாது போயுள்ளதென நிறுவனம் தெரிவித்தது. சந்தையில் இணையம் மூலமான முழுமையான ஆயுள், ஓய்வூதியத் தீர்வுகளை வழங்கிய முதலாவது உள்நாட்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக, செலிங்கோ லைஃப் காணப்படுகிறது.
இணையவழித் திட்டங்கள் இலகுவாக அணுகல், புரிந்துகொள்ளல், கொள்வனவு ஆகிய நன்மைகளைக் கொண்டுள்ளதோடு, ஆண்டின் 365 நாள்களிலும் பெற்றுக்கொள்ளப்படக் கூடியதாக உள்ளது.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் இணைய ஆயுள் காப்புறுதித் திட்டமானது, பூரணமானது என்பதோடு, தெரிவுசெய்யக்கூடிய விபத்து மரணச் சலுகை, 36 பாரதூரமான நோய்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் பாரதூர நோய்த் தெரிவு ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இதில் வழங்கப்படும் பாரதூரமான நோய்த் தெரிவானது, நிறுவனத்தால் வழக்கமாக வழங்கப்படும் பாரதூரமான நோய்ப் பாதுகாப்பு வசதியே ஆகும்.
ஆயுள் காப்புறுதித் திட்டமானது சேமிப்புத் தெரிவொன்றையும் கொண்டிருக்கும். ஆயுள் காப்புறுதிக்கான காலப்பகுதியில் வருமானமொன்றை உருவாக்கிக்கொள்ள விரும்பும் ஒருவர் இதைத் தெரிவுசெய்ய முடியும் என்பதோடு, இத்திட்டத்துக்காகத் தெரிவுசெய்யப்பட்ட சேமிப்புகள், நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும் வீதத்தில் சேர்ந்துகொண்டிருக்கும். இந்த வீதமானது வங்கிகளால் வழங்கப்படும் வழக்கமான சேமிப்பு வீதங்களை விட அதிகமானதாகவும், நிலையான வைப்புகளுக்கு வழங்கப்படும் அநேகமான வீதங்களுக்குப் போட்டித்தன்மையாகவும் காணப்படுமென, செலிங்கோ லைஃப் தெரிவித்தது.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தால் வழங்கப்படும் இணைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஆயுள் காப்புறுதித் தெரிவின்றி ஓய்வூதியத் திட்டமொன்றைத் தெரிவுசெய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
ஓய்வூதியத் திட்டமும் இலகுவானது எனத் தெரிவித்த அந்நிறுவனம், இச்செயற்பாடு பூர்த்தியடைய 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே எடுக்குமெனவும் தெரிவித்தது.
அனைத்து இணையவழித் திட்டங்களும் www.ceylincolife.com என்ற இணைய முகவரியில் பார்வையிடப்பட முடியும். 'இணையத்தில் வாங்குக' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, ஆயுள் காப்புறுதி அல்லது ஓ10ய்வூதியத் திட்டத்தைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு ஏற்படுமென்பதோடு, அவரவரின் தேவைகளுக்கேற்ப உடனடியாகவே கூறு விலைப்பட்டியல்களைப் (ஙரழவயவழைn) பெற்றுக்கொள்ள முடியும். அதைத் தொடர்ந்து பதிவுசெய்தலுக்கான செயற்பாடு இடம்பெறும். ஆரோக்கியம், பழக்கவழக்கங்கள் தொடர்பான சில அடிப்படையான கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர், கொடுப்பனவுப் பகுதிக்குச் செல்ல முடியும். அங்கு, பாதுகாப்பான முறையில் கொடுப்பனவை மேற்கொள்ள முடியும்.
கொடுப்பனவுகளை இணையத்தில் மேற்கொள்ள முடியுமென்பதோடு, நுயளல Pay மூலமாகவும் மேற்கொள்ள முடியும். அத்தோடு, தமது திட்டங்களை முழுமையாக இணைய வாடிக்கையாளர் தளம் மூலமாக வாடிக்கையாளர்கள் பார்வையிட முடியுமெனவும் நிறுவனம் மேலும் தெரிவித்தது.
கொவிட்-19 பரவலிலிருந்து செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் காப்புறுதிக் கொள்கைகளைக் கொண்டிருப்போரும் அவர்களது குடும்பத்தினரும் சமுதாயமும் பாதுகாப்பாக, வீடுகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, பல்வேறான வழிமுறைகளையும் அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. பல இணையவழிக் கொடுப்பனவு வசதிகள், தொடர்பாடல் வழிகள் ஆகியவற்றோடு, காப்புறுதிக் கோரல் தொகைகளைச் செலுத்துதலுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, காப்புறுதிகளைக் கொண்டுள்ள வாடிக்iகாளர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற SLIM-Nielsen மக்கள் விருதுகளில், தொடர்ச்சியாக 14ஆவது ஆண்டாகவும், 'ஆண்டுக்கான மக்களின் ஆயுள் காப்புறுதிச் சேவை வழங்குநர்' விருதை வென்ற செலிங்கோ லைஃப், இலங்கையின் மிகவும் பெறுமதியான ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான 'பிரான்ட் ஃபினான்ஸ்' நிறுவனத்தின் விருதை 2019ஆம் ஆண்டில் வென்றதோடு, இலங்கையின் வர்த்தகத்துக்கான சர்வதேச சம்மேளனமானத்தால் இவ்வாண்டில் அதிகம் வியக்கப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் தெரிவானது. அத்தோடு, இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான வேள்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விருதை, தொடர்ச்சியான 6ஆவது ஆண்டாகவும் 2019ஆம் ஆண்டு செலிங்கோ லைஃப் வென்றதோடு, நாட்டின் முதல் 30 நிறுவனங்கள் என்ற பிஸ்னஸ் டுடேயின் தரப்படுத்தலில் ஒட்டுமொத்தத் தரப்படுத்தலில் 6ஆவது இடத்திலும் உள்ளது.
செயற்படுநிலையிலுள்ள காப்புறுதி ஒப்பந்தங்கள் மூலமாக, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாழ்க்கைகளைக் காப்புறுதி செய்துள்ள செலிங்கோ லைஃப் நிறுவனம், புத்தாக்கம், உற்பத்தி ஆராய்ச்சியும் அபிவிருத்தியும், வாடிக்கையாளர் சேவை, தொழில்வாண்மை அபிவிருத்தி, கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில், உள்நாட்டின் காப்புறுதித் துறையின் உயர்நிலை அளவுகோலாகக் கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .