Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 01 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பத் வங்கி தனது புதிய ‘சுப்பர்’ தர கிளையை அண்மையில், இல. 408, பிரதான வீதி, நீர்கொழும்பு என்ற முகவரியில் திறந்து வைத்துள்ளது.
இதன் மூலமாக, நீர்கொழும்பில் 365 நாள் வங்கிச்சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள், பொது விடுமுறை தினங்கள் அடங்கலாக வருடத்தின் அனைத்து தினங்களிலும் மு.ப 8 மணி முதல் பி.ப 8 மணி வரை இந்தக் கிளை திறந்திருக்கும்.
நவீன வங்கியியலின் அனைத்து வசதிகளையும் இப்புதிய ‘சுப்பர்’ கிளை கொண்டிருப்பதுடன், பல்வேறு புத்தாக்கமான உற்பத்திகளையும், நவீன வங்கிச் சேவைகளையும் வழங்குகின்றது.
இப்பிரதேசவாசிகள் தற்போது, நீர்கொழும்பின் மய்யத்தில் அமைந்துள்ள இந்த வங்கிக் கிளையின் மூலமாக பல்வேறுபட்ட சேமிப்புத் தீர்வுகள், வீடமைப்புக் கடன்கள், குத்தகை வசதிகள், இலத்திரனியல் வங்கிச் சேவை தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை சௌகரியத்துடன் அனுபவிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரான நந்த பெர்ணான்டோ இந்த ‘சுப்பர்’ கிளையை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள், அதன் வாடிக்கையாளர்கள், ஏனைய பல விருந்தினர்கள், நலன்விரும்பிகளும் திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்டனர்.
அநுராதபுரம், பொரளை, தர்மபால மாவத்தை, வெள்ளவத்தை, காலி, கம்பஹா, கண்டி, கிரிபத்கொடை, குருணாகல், மஹரகம, மாத்தறை, பாணந்துறை ஆகிய இடங்களில் ஏற்கெனவே அமைந்துள்ள சம்பத் வங்கியின் 12 ‘சுப்பர்’ கிளைகளின் வலையமைப்பில் தற்போது நீர்கொழும்பு கிளையும் இணைக்கப்பட்டுள்ளதுடன், நாடெங்கிலும் சம்பத் வங்கிக் கிளைகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 229ஆக உயர்வடைந்துள்ளது.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago