Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் நிதிப் பெறுபேறுகள், பொதுச் செயற்பாடுகள், எதிர்காலத்திட்டங்கள் மற்றும் மூலோபாய செயற்பாடுகளின் நிலைவரங்கள் குறித்த பரிபூரண புரிந்துணர்வை முதலீட்டு சமூகத்துக்கு பெற்றுக் கொடுப்பதற்காக முதலீட்டாளர் அமர்வு வெபினார் ஒன்றை வங்கி ஏற்பாடு செய்திருந்தது.
வருடத்தின் ஆரம்பம் முதல், வெபினார் ஊடாக முதலீட்டாளர் அமர்வுகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஏற்பாடு செய்திருந்தது, இதனூடாக வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட முதலீட்டாளர்களுக்கு பங்குபற்றுவதற்கு இலகுவான, நெகிழ்ச்சியான கட்டமைப்பை வங்கி உருவாக்கியிருந்தது.
2018ஆம் ஆண்டின் முதல் அரையாண்டின் நிதிப் பெறுபேறுகள் குறித்து கவனம் செலுத்தியிருந்த முதலீட்டாளர் அமர்வு வெபினார், அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரேணுகா பெர்னான்டோ பிரதான விளக்கவுரையை வழங்கியிருந்ததுடன், இதனைத் தொடர்ந்து நேரடி வினா, விடை அமர்வும் இடம்பெற்றது. முன்னணி வங்கியியல் அதிகாரிகள் அடங்கிய செயற்பாட்டாளர்கள் இந்த கேள்விகளுக்கு பதில்களை வழங்கியிருந்தனர். இந்த குழுவில், வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரேணுகா பெர்னான்டோ, பிரதம நிதி அதிகாரி அஜித் அக்மீமன, நுகர்வோர் வங்கியியல் மற்றும் அட்டைகளுக்கான சிரேஷ்ட நிறைவேற்று பதில் தலைவர் பிரியந்த தல்வத்த, பிரதம செயற்பாட்டு அதிகாரி திலக் பியதிகம, நுகர்வோர் வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட நிறைவேற்று பதில் தலைவர் ஹேமந்த குணதிலக ஆகியோர் அடங்கியிருந்தனர்.
முதலீட்டாளர் அமர்வு வெபினார் தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரேணுகா பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “வருடத்தின் முற்பகுதியில் நாம் முதன் முறையாக வெபினார் ஊடாக முதலீட்டாளர் அமர்வை ஏற்பாடு செய்ய தீர்மானித்தோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான எமது அர்ப்பணிப்பு மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல், கடதாசியில்லாத, இலத்திரனியல் பொருளாதார வலிமையை பயன்படுத்தி இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முன்வந்திருந்தோம். இதன் பெறுபேறுகளை காண்பதையிட்டு நாம் மிகவும் திருப்தியடைவதுடன், எதிர்காலத்திலும் இவ்வாறான வெபினார்களினூடாக அமர்வுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். முதலீட்டாளர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் சௌகரியமான வகையில், இந்த அமர்வில் இலகுவாக பங்கேற்கலாம். நாம் நிதியியல் சார் பெறுபேறுகளில் கவனம் செலுத்துவதுடன், எமது முதலீட்டாளர்களுக்கு எமது மூலோபாய செயன்முறைகள் மற்றும் சாதனைகள் பற்றிய விளக்கங்களை பெற்றுக் கொடுக்கிறோம்” என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago