Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 10 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்திய, சிக்கல்களில்லாத வாடிக்கையாளர் சேவையை பெற்றுக் கொடுக்கும் வகையில் பெருமளவு வசதிகள் படைத்த புதிய முகவரிக்கு தனது திருகோணமலை கிளையை அண்மையில் இடமாற்றியிருந்தது.
புதிய முகவரிக்கு இடமாற்றப்பட்ட கிளையை (இல. 275, பிரதான வீதி, திருகோணமலை) பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் திறந்து வைத்தார்.
சுற்றுலா பகுதி மற்றும் கடற்றொழில் இடம்பெறும் பிரதேசம் என்பதுடன், இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகவும் அமைந்துள்ளது. பல ஆரம்ப நிலை வியாபாரங்கள் காணப்படுவதுடன், மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதையும் காண முடிகின்றது. எனவே, பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துக்கு விஜயம் செய்து நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையில் பெருமளவு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், திருகோணமலை கிளை புதிய முகவரிக்கு இடம்மாற்றப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் லயனல் பெர்னான்டோ (சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர்), லக்சந்த குணவர்தன (பிரதி பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல்), கணேசன் துஷ்யந்தன் (சிரேஷ்ட முகாமையாளர் செயற்பாடுகள்) மற்றும் கே. கமலகரன் (திருகோணமலை கிளை முகாமையாளர்) ஆகியோரும் பெருமளவு வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago