2025 மே 19, திங்கட்கிழமை

புனிதர்களுக்கிடையிலான சமர் போட்டிகளுக்கு எலிபன்ட் ஹவுஸ், கீல்ஸ் அனுசரணை

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

86ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புனிதர்களுக்கிடையிலான சமர்’ கிரிக்கெட் போட்டிகளுக்கு எலிபன்ட் ஹவுஸ்,  கீல்ஸ் கிரெஸ்ட் ஆகியன அனுசரணை வழங்கியிருந்தன. கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில், அண்மையில் நடைபெற்ற புனித சூசையப்பர் எதிர்  புனித பேதுரு ஆகிய கல்லூரி அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு, இந்த அனுசரணையை வழங்க இவ்விரு வர்த்தக நாமங்களும் முன்வந்திருந்தன.  

கொழும்பிலுள்ள இரு பிரபல்யமான பாடசாலைகளுக்கு இடையில், வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்தக் கிரிக்கெட் போட்டிகளின் உத்தியோகபூர்வ உணவு, பானங்கள், ஐஸ்கிறீம் வழங்குநர் எனும் அனுசரணையை வழங்க, எலிபன்ட் ஹவுஸ்,  கீல்ஸ் கிரெஸ்ட் ஆகியன இணைந்துள்ளன. 

இவை, மக்களிடத்தில் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமங்களாகத் திகழ்வதுடன், பாடசாலைகளுக்கிடையே இடம்பெறும் ‘பிக் மெட்ச்’ போட்டிகளுக்கு நீண்ட காலமாக, உணவு, பானங்கள், ஐஸ்கிறீம் வழங்கும் பங்காளர் அனுசரணையை  சிலோன் கோல்ட்  ஸ்டோர்ஸ், கீல்ஸ் பூட்ஸ் புரொடக்ட்ஸ் ஆகியன வழங்கி வருகின்றன.

 இந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில், ஈடிணையற்ற  களிப்பையும் மகிழ்ச்சியையும் சேர்க்கும் நாமங்களாக இவ்விரண்டும் திகழ்கின்றன. நாவூறும் சுவையில் தயாரிக்கப்படும் கீல்ஸ் கிரெஸ்ட் இறைச்சி வகைகள், எலிபன்ட் ஹவுஸ் தாகம் தீர்த்து புத்துணர்வூட்டும் பானங்கள்,  ஐஸ்கிறீம் வகைகள் போன்றன கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்புக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றன என்பது அனுபவவாயிலான உண்மை.  

பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,  விருந்தினர்களுடன் போட்டியிடும் விளையாட்டு வீரர்களுக்கும் இந்தப் பாரம்பரிய போட்டியின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதை மென்மேலும் வலுவூட்டுவதோடு, விளையாட்டு வீரரின் உத்வேகம், இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டிகரத்தன்மை ஆகியன பார்வையாளர்களை ஊக்குவிப்பதற்குப் பேருதவியாக, இந்த அனுசரணை அமைந்திருந்தது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X