Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் டிக்கிரி, நாட்டில் பல பாகங்களில் இருந்து ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 200 மதிப்பெண்கள் பெற்ற பத்து மாணவர்களுக்கும் சிறப்பு வெகுமதிகளை வழங்கியுள்ளது. சிறுவர்களின் இத்தகைய சாதனைகளை கொண்டாடுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட செலான் வங்கி, தங்கள் இளம் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக செயல்படும் போட்டித் தேர்வில் முதலிடம் பிடித்த சிறந்த சாதனையாளர்களுக்கு, டெப்லட் கணினி வழங்கியதுடன், அவர்களின் செலான் டிக்கிரி கணக்குகளில் பரிசு வைப்புத்தொகையையும் சேர்த்ததாக வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலான் டிக்கிரியின் இந்த முன்முயற்சி குறித்து, செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துறையின் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்து தெரிவிக்கையில், “சிறுவர்களே எங்கள் எதிர்காலம். சிறுவர்கள் மிகவும் விரும்பும் சேமிப்புக் கணக்கு என்ற வகையில், செலான் டிக்கிரி எப்போதும் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறது. அவர்களின் சாதனைகள் குறித்து சிறுவர்களை உற்சாகப்படுத்துவதும், முதன் முதலாக அவர்களுக்கு ஆதரவளிப்பதும் நாங்கள் தான். அவர்கள் உரிமையாக இருக்கும் எதிர்காலத்தை பிரதிபலிக்க ஒரு டேப் கணினியை அவர்களுக்கு வழங்க நாங்கள் முடிவு செய்தோம். மேலும் அவர்களின் எதிர்கால எதிர்ப்பார்ப்புகள் மற்றும் கனவுகளை உருவாக்குவதில் நிதிப் பாதுகாப்பு வகிக்கும் பங்கை அவர்களுக்கு வலியுறுத்தவும் நாங்கள் விரும்பினோம், ஆகவே அவர்களின் டிக்கிரி கணக்கில் சிறப்பு வைப்புத்தொகையின் மூலம் சேமிப்புப் பழக்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது அவர்களுக்கு சிறந்த நீண்டகால வெகுமதி என்று நம்புகிறோம். ”
சிறு பிராயத்தில் சிறுவர்களுக்குள் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதின் முக்கியத்துவத்தை செலான் வங்கி நம்புகிறது, ஆதலால் அவர்கள் இளமையாக இருக்கும்போது வலுவான நிதி நிலையை உருவாக்குவதற்கான பாதையில் அவர்களுக்கு உதவுகிறது. பல்வேறு நிலைகளில் சேமிப்பிற்கான அவர்களின் முயற்சிக்கு வெகுமதிகளை வழங்குவதன் மூலமும், அவர்களின் சேமிப்பின் மூலம் அவர்கள் சம்பாதிக்கும் வட்டிக்கு மேலதிகமாக போனஸ் வட்டித் திட்டத்தையும் வழங்குவதன் மூலம் செலான் டிக்கிரி சிறுவர்களில் பண மேலாண்மை திறன்களைக் கற்பிப்பதற்கு முயற்சிக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
3 hours ago