2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான பங்களிப்பை கொமர்ஷல் வங்கி அதிகரிப்பு

Freelancer   / 2024 நவம்பர் 14 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டில் கொமர்ஷல் வங்கியிடமிருந்து பெண் தொழில் முயற்சியாளர்கள் சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளனர், இந்த முக்கியமான வாடிக்கையாளர் பிரிவுடன் தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் வங்கி அதன் நேரடி ஈடுபாட்டை முன்னெடுத்துள்ளது. இதில் தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி திட்டங்கள், வெள்ளவத்தையில் உள்ள வங்கியின் னுபைiணுழநெ இல் டிஜிட்டல் வங்கியியல் தொடர்பான பயிற்சி திட்டங்கள் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி முகாமைத்துவ நிறுவகத்துடன் (PIM) இணைந்து முன்னெடுக்கப்படும் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான பிரத்தியேக SME திறன் அபிவிருத்தி தொடர்பான பல சான்றிதழ் கற்கைநெறிகளும் அடங்கும்.

இந்த திட்டங்களுக்கு 'கொமர்ஷல் வங்கியினால் பெண் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வங்கியியல் தயாரிப்பு மற்றும் சேவைகள் பிரிவான அணகி ஆதரவு வழங்கியது. இந்த பிரிவில் 'அணகி மகளிர் சேமிப்புக் கணக்கு', 'சிறிய மற்றும் நடுத்தர பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான அணகி வர்த்தகக் கடன்' (WSME) மற்றும் பெண்களை வலுப்படுத்துவதற்கும் பங்களிப்பினை வழங்குவதற்கும் மற்றும் அவர்களின் விரிவாக்கத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிதியியல் அல்லாத நன்மைகள் உள்ளடங்கலான பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளும் அடங்கும்.

2024 இல் பெண் தொழில்முயற்சியாளர்களுடனான வங்கியின் சில செயற்பாடுகள் இங்கே படத்தில் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X