Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 22 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் நிதி மோசடி தொடர்பாக தமக்கு பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இவை தொடர்பில் அனைத்து இலங்கையர்களும் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கட்டட உருவப்படம், இலச்சினை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி இவ்வாறான நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொது மக்களை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து இவை அனுப்பப்படுவதைப் போன்று ஏமாற்றியே, இந்த மோசடிகள் இடம்பெறுவதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
cbs.banklanka@asia.com, info@cbsl-lk.com, customercare@cbsllk.com போன்ற போலியான மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும், குறித்த மின்னஞ்சலை பெறுபவர் பாரிய நிதித் தொகையை வெற்றியீட்டியுள்ளதாக அறிவித்தும், இந்தப் பரிசைப் பெற்றுக் கொள்வதற்கு, குறிப்பிட்ட நிதியை வைப்புச் செய்து, தமக்குரிய பரிசை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி, இந்த மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.
அத்துடன், மின்னஞ்சலை பெறுபவர்களின் கடவுச்சீட்டு இலக்கம், வங்கிக் கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற முக்கியமான பிரத்தியேக தகவல்களை வழங்குமாறு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு எவ்வித தொடர்புகள் இல்லையெனவும், இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறான வெகுமதி பரிசுத் திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்ப டவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இவ்வாறான நிதி மோசடிகளுக்கு ஏமாற வேண்டாமெனவும் அறிவித்துள்ளது. இவ்வாறு கிடைக்கும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரியுள்ளது.
இவ்வாறு மின்னஞ்சல் கிடைத்திருந்தால் அருகிலுள்ள குறித்த நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவற்றின் உண்மைத் தன்மை உறுதி செய்து கொள்ளுமாறும், அடுத்த கட்டமாக காவல் துறையின் உதவியை நாடுமாறும் தெரிவித்துள்ளது.
1 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Jul 2025
19 Jul 2025