2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மஹாபொல லொட்டோ வலையமைப்பு மெதிரிகிரிய மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களுக்கு விஸ்தரிப்பு

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவருட காலப்பகுதிக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட லொத்தர் விற்பனையில் புத்தாக்கங்களை படைத்து வரும் மஹாபொல லொட்டோ, நாட்டின் பெருமளவு பின்தங்கிய பகுதிகளுக்கு தனது சேவைகளை விஸ்தரிப்பது பற்றி கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில், 'உங்கள் அதிர்ஷ்ட இலக்கத்தை தெரிவு செய்யுங்கள்| எனும் லொட்டோ கொள்கையை அறிமுகம் செய்த மஹாபொல லொட்டோ, தனது விற்பனை நிலையங்களை பொலன்நறுவையின், மெதிரிகிரிய பிரதேசத்திலும், பருத்தித்துறை பேருந்து நிலையத்திலும் அங்குரார்ப்பணம் செய்திருந்தது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு மஹாபொல லொட்டோவின் பொருட்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நிலையங்கள் ஊடாக, மஹாபொல லொட்டோ மற்றுமொரு முக்கியமான மைல்கல் சாதனையையும் எய்தியுள்ளது. தற்போது நிறுவனத்தின் பிரசன்னம் நாடு முழுவதும் காணப்படும் 25 மாவட்டங்களில் ஒன்பதில் காணப்படுகிறது. குறிப்பாக கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, பொலன்நறுவை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகியவற்றில் அதன் பிரசன்னம் காணப்படுகிறது. நாடு முழுவதும் காணப்படும் லாஃவ்ஸ் விற்பனை வலையமைப்பிலும் மஹாபொல லொட்டோ லொத்தர்களை கொள்வனவு செய்யலாம். 

இன்றைய காலகட்டத்தில், மஹாபொல லொட்டோ லொத்தர் விற்பனை, நடமாடும் விற்பனை அலகுகள் மற்றும் லாஃவ்ஸ் விற்பனை நிலையங்கள் வலையமைப்பு ஆகியவற்றுக்கு மேலதிகமாக கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை மற்றும் பொலன்நறுவை ஆகிய பிராந்திய நிலையங்களிலும் காணப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, மஹாபொல லொட்டோ பிரபல்யமான விற்பனை நிலையங்கள் மஜெஸ்டிக் சிட்டி, பெலவத்தை, பத்தரமுல்ல சந்தி, செத்சிரிபுர, ராஜகிரிய, ஒபேசேகரபுர, வோட் பிளேஸ் (பொரளை), கொலன்னாவ சந்தி, அங்கொட, கொம்பனித்தெரு, கோட்டை புகையிரத நிலையம், கொட்டாவ, அத்துருகிரய வீதி (கிரிபத்கொட), பிரிஸ்டல் வீதி (பம்பலப்பிட்டி), மஹாரகம சந்தி, பிலியந்தல வீதி (மஹாரகம), பொரலஸ்கமுவ, விஜேராம சந்தி (தெஹிவளை), அத்திடிய, விஜய மாவத்தை (மஹாரகம), புலத்சிங்கள (ஹோமாகம), தலவத்துகொட, டொரிங்டன், நகர மண்டபம், பிட்டகோட்டே, கொஹுவல, கடுவெல, மதுகம, நுகேகொட, களுபோவில, கண்டி மணிக்கூட்டு கோபுரம், பேராதனை, திருகோணமலை பேருந்து தரிப்பிடம், விஹார மாவத்தை (திருகோணமலை) மற்றும் யாழ்ப்பாண நகரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. 

கொடகம, கைநதி மாவத்தை, மானிப்பாய் சந்தை, அச்சுவேலி பேருந்து தரிப்பிடம், உடுவில், கடுகன்னாவ, பிலிமத்தலாவ, கலகெதர, பெனிதெனிய, தனவந்தரி வைத்தியசாலை, அபயபுர, தொரன்காடு சந்தி, கந்தளாய், ஜயந்திபுர, மின்னேரிய, ஹிங்குரக்கொட, திவுலன்கடவெல, அம்பகஸ்வெல மற்றும் நாட்டின் மேலும் பல பகுதிகளில் காணப்படுகின்றன. 

'உங்கள் அதிர்ஷ்ட இலக்கத்தை தெரிவு செய்யுங்கள்| எனும் முறை மூலமாக பெருமளவு புத்தாக்கங்களை அறிமுகம் செய்துள்ள மஹாபொல லொட்டோ, 20 ரூபாய் டிக்கட்டையும் அண்மையில் சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. இது நிறுவனத்தின் தொடர்ச்சியான விஸ்தரிப்பு செயற்பாடுகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தது. இவை வேகமான மற்றும் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. லொத்தர் விற்பனையில் புத்தாக்கமான செயற்பாடுகளை பதிவு செய்து வரும் இந்த மஹாபொல லொட்டோ நாட்டின் வசதிகள் குறைந்த மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்துக்கும் பங்களிப்பு செய்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X