Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, வட மாகாணத்தின், கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த, ஸ்கந்தபுரம் கிராமத்தில் இரு பாடசாலை கட்டடங்கள் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வு ஆகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெற்றது. மனிதநேய அபிவிருத்தி நிறுவனத்தினால் (HDO) இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஜப்பானிய அரசாங்கத்தின் Grassroots Human Security Grant Aid திட்டத்தினூடாக இந்தத் திட்டத்துக்கு நிதி வழங்கப்பட்டிருந்தது. கண்ணிவெடி அகற்றப்பட்ட ஸ்கந்தபுரம் கிராமத்தில், Grassroots Human Security திட்டத்தின் கீழ் ஜப்பானிய உதவியினூடாக இந்தப் பணிகளுக்கு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தன.
இந்தத் திட்டத்தில், ஜப்பானிய அரசாங்கம் மொத்தமாக 88,819 அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. இரு பாடசாலை கட்டடங்களை நிர்மாணித்து, அதனூடாக சுமார் 250 மாணவர்களுக்கு உகந்த பயிலல் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நூலகம், விசேட தேவை கொண்ட மாணவர்களுக்கான வகுப்பறைகள் போன்றன உள்ளடக்கம். மேலும், வகுப்பறை மேசைகள் மற்றும் கதிரைகள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கும் இந்தத் திட்டத்தினூடாக உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.
சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு அவசியமான மேம்படுத்தப்பட்ட பயிலல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தத் திட்டத்தினூடாக பங்களிப்பு வழங்கப்படும்.
இலங்கையில் நிலைபேறான அபிவிருத்திக்கு அவசியமான உதவிகளை இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் வழங்கும்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago