Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
COVID-19தொற்று நிலையை எதிர்கொள்ளும் முகமாகஉலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளித்தது.
vivoவின்#vivocare முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இதன்போது15,000 முகக்கவசங்கள், இச்சந்தர்ப்பத்தில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக அயராது பணியாற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்காக வழங்கப்பட்டன.
சுகாதாரத்துறை பணியாளர்களை பாதுகாப்பதன் அவசியத்தை vivo Mobile Lanka நன்கு புரிந்து கொண்டுள்ளமையால், இந்த பராமரிப்பாளர்களின்பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக விசேட முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த பாதுகாப்பு முகக்கவச தொகையானது சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம், vivo Mobile Lankaவின்பணிப்பாளர்எலிசன் ஜின்னினால், அமைச்சக வளாகத்தில் வைத்து ஏப்ரல் 9 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இது தொடர்பில் vivo Mobile Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங், கருத்து தெரிவிக்கையில்," இந்த முக்கியமான காலப்பகுதியில், நாம் அனைவரும் ஒற்றுமையாக நின்று இந்த உலகளாவிய சுகாதார தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பங்களிக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த காலகட்டத்தில் எங்கள் புதிய ஓப்லைன் தயாரிப்பு வெளியீடுகள் அனைத்தையும் ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த முக்கியமான காலங்களில் பராமரிப்பாளர்கள் வகிக்கும் பங்கை நாங்கள் அங்கீகரிப்பதுடன், மேலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு அரசாங்கத்துக்கு உதவ விரும்புகிறோம்,” என்றார்.
VIVO பற்றி
vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன் புதுமையான ஸ்மார்ட் மொபைல்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் திடமாகவுள்ளது.vivo உலகளவில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் கிடைக்கப் பெறுகின்றது. வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது. தற்போது 20,000 இயக்குனர்கள் Dongguan, Shenzhen, Nanjing, Chongqing ஆகிய நான்கு தலமையகங்களின் கீழ் பணியாற்றுகின்றனர். 3,000 பொறியியலாளர்கள் San Diego, Shenzhen, Nanjing, Beijing, Hangzhou, Taipei மற்றும் Silicon Valley ஆகிய 7 அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் Dongguan, Chongqing, Jakarta, New Delhi மற்றும் Bangladesh ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago