Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளோருக்கான சிகிச்சைகளை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், உயர்தரத்திலானதும் நோயாளிகளுக்குச் சிரமத்தை வழங்காததுமான இரண்டு மூச்சியக்கிகளை (செயற்கை மூச்சுக்கருவி அல்லது ventilator), ஆயுள் காப்புறுதியின் முன்னணி நிறுவனமான செலிங்கோ லைஃப் அன்பளித்துள்ளது.
Resmed Stellar 100 வகையிலான இந்த இரண்டு மூச்சியக்கிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதோடு, இலங்கையில் கொவிட்-19 தொற்றுப்பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்துக்குத் தலைமை தாங்கும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம், இராணுவத் தலைமையகத்தின் வைத்து ஏப்ரல் 16ஆம் திகதி கையளிக்கப்பட்டன.
இலங்கையிலிருந்து கொரோனாவைரஸை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கத்துக்கு இக்கருவிகள் உதவுமென நம்புவதாக, இந்த அன்பளிப்புகளோடு இணைத்து வழங்கப்பட்ட கடிதத்தில், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் குறிப்பிட்டிருந்தார்.
அரச மருத்துவ நிறுவனங்களுக்கு செலிங்கோ லைஃப் நிறுவனத்தால், அத்தியாவசிய உபகரணங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்படுவதன் தொடர்ச்சியான ஒரு விடயமாகவே இவ்வன்பளிப்பும் அமைந்திருந்தது.
இவ்வாண்டின் ஆரம்பத்தில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் புற்றுநோய் நோயாளிகளுக்கான சிகிச்சைக்காக வேதிச்சிகிச்சைப் பிரிவை (Chemotherapy Unit) செலிங்கோ லைஃப் முழுமையாக மீளப் புனரமைத்து, கருவிகளை மீளவும் அன்பளித்திருந்தது முன்னதாக, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலை, இலங்கை தேசிய வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, களுபோவிலவில் அமைந்துள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை ஆகிய ஐந்து அரச வைத்தியசாலைகளுக்கு, பூரணமான கருவிகளையும் தளபாடங்களையும் கொண்ட உயர் சார்புநிலை அலகுகளை (High Dependency Unit) அன்பளித்திருந்தது.
11 minute ago
18 minute ago
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
27 minute ago
3 hours ago