S.Sekar / 2023 ஜனவரி 06 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், 2022 இன் மூன்றாம் காலாண்டில் சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலிலும் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது.

மூன்றாம் காலாண்டில் இரண்டாம் மிகப் பெரிய புதிய வியாபார கட்டுப்பண உருவாக்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் உயர்வடைந்திருந்தது. தொழிற்துறையில் காணப்படும் சிறந்த 5 செயற்பாட்டாளர்கள் மத்தியில், நேர்த்தியான வழமையான வியாபார கட்டுப்பணத்தை பதிவு செய்திருந்த இரு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்ததுடன், 10% வளர்ச்சியைப் பெற்றிருந்தது. 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் மிகச் சிறந்த இரட்டை இலக்க வளர்ச்சியாக இது அமைந்திருந்தது.
2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. நிறுவனத்தின் வரிக்கு முன்னைய இலாபம் ரூ. 333 மில்லியனிலிருந்து 14%இனால் அதிகரித்து ரூ. 379 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த தேறிய வருமானம் ரூ. 5.22 பில்லியனிலிருந்து 33%இனால் அதிகரித்து ரூ. 6.95 பில்லியனாக பதிவாகியிருந்தது. நிகர செலுத்தப்பட்ட கட்டுப்பணப் பெறுமதி ரூ. 3.96 பில்லியனிலிருந்து ரூ. 4.10 பில்லியனாக உயர்வடைந்திருந்ததுடன், தேறிய செலுத்தப்பட்ட கட்டுப்பண பெறுமதி ரூ. 3.78 பில்லியனிலிருந்து ரூ. 3.87 பில்லியனாக அதிகரித்திருந்தது. மேலும், நிறுவனம் 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் செலுத்தியிருந்த ரூ. 1.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில், ரூ. 1.5 பில்லியனை நஷ்டஈடுகளாக செலுத்தியிருந்தது. தொழிற்படு இலாபம் ரூ. 293 மில்லியனிலிருந்து 8%இனால் அதிகரித்து ரூ. 318 மில்லியனாக உயர்வடைந்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் குறிப்பிடுகையில் “சவால்கள் நிறைந்த சூழலில் செயலாற்றிய போதிலும், பிரதான நிதிக் குறிகாட்டிகளில் சிறந்த வளர்ச்சியை நாம் பதிவு செய்திருந்தோம். வாடிக்கையாளர்களை மையப்படுத்திய எமது தந்திரோபாயம், சேவைச் சிறப்பு மற்றும் நாம் வழங்கும் புதிய தலைமுறை டிஜிட்டல் அனுபவங்கள் போன்றன எமது வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. இலங்கையர்களுக்கு தமது கனவுகளை தொடர்வதற்கு தமது புத்தாக்கமான நிபுணத்துவத்தை நிறுவனம் வழங்கி, நிதிசார் பின்னடைவுகளிலிருந்து பாதுகாப்பை வழங்கும்.” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “நிறுவனத்தின் தூரநோக்குடைய தந்திரோபாய நிதி முகாமைத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரதான பிரிவுகளில் வளர்ச்சியை எய்துவதற்கு உதவியாக அமைந்திருந்தது. துரித தந்திரோபாயத்தில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதுடன், எமது வினைத்திறனான நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளை தொடர்ந்து முன்னெடுத்து, நிறுவனத்தின் உறுதியான வளர்ச்சியை உறுதி செய்வோம்.” என்றார்.
2022 செப்டெம்பர் மாத நிறைவில் யூனியன் அஷ்யூரன்ஸ் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 73 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 2021 ஆம் ஆண்டின் நிறைவில் ரூ. 70.8 பில்லியனாக காணப்பட்டது. ஆயுள் காப்புறுதி நிதியத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 61 பில்லியனாக காணப்பட்டது.
30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago