Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, புதிய தொழில்நுட்ப வசதிகளையும் சேவைகளையும் வழங்கிவரும் மெட்ரோபொலிடன் குழுமம், தன்னுடைய 60ஆவது ஆண்டு நிறைவை, நினைவு முத்திரையொன்றை வெளியிட்டுக் கொண்டாடியது.
குழுமத்தின் வளர்ச்சி, அதன் பெருமதி, நம்பிக்கை, திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் முகமாகவும் குழுமத்தின் 60 வருட வெற்றிக்கான எடுத்துக்காட்டாகவுமே, இந்த நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
நினைவு முத்திரையை, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ண, மெட்ரோபொலிடன் குழுமத்தின் தலைவர் ஜே.ஜே.அம்பானிக்குவதை, இங்கு படத்தில் காணலாம்.
1958ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், அலுவலக உபகரங்களை விநியோகிக்கும் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த 60 வருட பூர்த்தி குறித்து கருத்துத் தெரிவித்த குழுமத்தின் தலைவர் ஜே.ஜே. அம்பானி, “கடந்த 6 தசாப்தகாலமாக, அலுவலக உபகரணங்களை விநியோகிக்கவும் பொருளியல் மற்றும் வேலைத்தளத்துக்கான தீர்வுகளை வழங்குவதற்கும் என்று சேவையாற்றி வந்தமை குறித்து பெருமையடைகின்றோம். தற்போது வெளியிடப்பட்ட இந்த முத்திரையும், எமது பெருமதி, வாடிக்கையாளருக்கான நம்பகத்தன்மை, பங்குதாரர்களின் மதிப்பு போன்றவற்றை எடுத்துக்காட்டுகின்றது” என்று கூறினார்.
4 minute ago
45 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago
52 minute ago