A.P.Mathan / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைதீவு குடியரசுக்கான தனது சேவைகளை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. மாலைதீவு தீவுக் கூட்டத்தில் முதல் வரிசை வங்கியொன்றை முழு அளவில் செயற்படுத்துவதற்கான அங்கீகாரம் உரிய அதிகாரபூர்வ அமைப்புக்களிடம் இருந்து கிடைத்துள்ளன.
இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கி மாலைதீவு நாணய அதிகார சபை மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பனவற்றிடம் இருந்து மாலை தீவில் கிளை ஒன்றை நடத்துவதற்கான உரிய அனுமதிகளைப் பெற்றுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கடவ்கடந்த செயற்பாடு கொண்ட மூன்றாவது நாடாக மாலைதீவு அமையவுள்ளது. 2003ல் வங்கி பங்களாதேஷில் பிரவேசித்தது. அதன் பிறகு இவ்வாண்டு ஜுன் மாதத்தில் வங்கி மியன்மாரில் பிரதிநிதிகள் அலுவலகம் ஒன்றை திறந்தது.
கொமர்ஷல் வங்கியின் புதிய கிளை 'கொமர்ஷல் வங்கி மாலைதீவு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்' என பெயரிடப்படவுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. நாணயமாற்று கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய வங்கி 50 வீதம் முதலீட்டை மேற்கொள்ளும். எஞ்சிய கட்டுப்பாட்டை மாலைதீவின் முன்னணி கம்பனிக் குழுமம் ஒன்று கொண்டிருக்கும்.
'மாலைதீவில் முழு அளவிலான கிளை ஒன்றை செயற்படுத்த அனுமதி கிடைத்துள்ளமை எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது' என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம். 'இலங்கையும் மாலைதீவும் மிக நெருக்கமான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ள நாடாகும். பொருளாதார ரீதியாகவும் மிக நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டுள்ளன. இலங்கை கம்பனிகள் மாலைதீவில் ஹோட்டல்களை நிர்வகிக்கின்றன. மாலைதீவின் உல்லாச பொழுது போக்கு விரும்தோம்பல் பிரிவுகளில் அதிகளவான இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். மாலைதீவில் இருந்து இங்கு வருகை தருபவர்கள் பலர் கல்வி மற்றும் சுகாதார பிரிவுகளில் சேவைகளைப் பெற்று வருகின்றனர். எனவே கொமர்ஷல் வங்கி போன்ற ஆற்றலும் சக்தியும் கொண்ட ஒரு வங்கி மாலைதீவில் நிலை கொண்டிருக்க வேண்டும் என்ற தர்க்கம் வலுவடைகின்றது' என்று அவர் மேலும் கூறினார். ஏற்கனவே கொமர்ஷல் வங்கி கொழும்பில் இருந்து மாலைதீவுக்கு கணிசமான கடல்கடந்த சேவைகளையும்இ வளங்களையும் விஸ்தரித்துள்ளது என்று அவர் தொடர்ந்து கூறினார்.
'மாலைதீவில் பிரவேசிக்கும் எமது மூலோபாயம் முதலில் ஒரு கிளையை தொடங்குவதாகும். அதன் பிறகு ஐந்தாண்டு காலப் பகுதியில் கிளைகளின் எண்ணிக்கையை மூன்றாக அதிகரிப்பதாகும்' என்று துரைரட்ணம் விளக்கினார். 'நடமாடும் அலகுகள் மற்றும் ATM இயந்திரங்கள் என்பனவும் முக்கிய இடங்களில் ஸ்தாபிக்கப்படும். விரிவான பூகோள பரப்பளவை கருத்திற் கொண்டு தொழில்நுட்பம் அதி உச்ச மட்டத்தில் பயன்படுத்தப்படும்' என்று அவர் விரிவாக மேலும் விளக்கினார்.
சேமிப்புக் கணக்கு, நடைமுறை கணக்கு, நிலையான வைப்புகள், தனிநபர் கடன்கன், வீட்டுக்கடன், கிரடிட் கார்ட், மேலதிகப் பற்று, வர்த்தகக் கடன்கள், வர்த்தக நிதிச் சேவைகள், இணைய வங்கி சேவை, நடமாடும் வங்கி சேவை, வெளிநாட்டு நாணய சேவை, நாணய மாற்று சேவை என தனியாருக்கும் நிறுவனங்களுக்கும் பல சேவைகளை வழங்க கொமர்ஷல் வங்கி திட்டமிட்டுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் முதலாவது கடல்கடந்த செயற்பாடு பங்களாதேஷின் Credit Agricole Indosuez (CAI) வங்கியை பொறுப்பேற்றதன் மூலம் தொடங்கியது. இன்று பங்களாதேஷில் 18 கிளைகள் உள்ளன. பல விருதுகளையும் வென்றுள்ளது. பினான்ஸியல் மிரர், சிறந்த செயற்பாட்டுக்கான ரொபின்டக்ஸ் பிஸ்னஸ் விருது. பினான்ஸியல் நியுஸ் செர்விஸஸ் (FNS) இன் சிறந்த செயற்பாடு கொண்ட வெளிநாட்டு வங்கிக்கான விருது, ICMAB இன் தேசிய சிறந்த கூட்டாண்மை விருது என்பன இந்த விருதுகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
இரண்டாவது கடல்கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் தொடங்கப்பட்டன. இலங்கையில் இருந்தும் மியன்மாரில் இருந்தும் வர்த்தக நோக்கத்தில் பங்களாதேஷ் வருபவர்களுக்கான நிதி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகின்றது. மியன்மாரில் பிரதிநிதிகள் அலுவலகம் ஒன்றை நடத்துவதுற்கு அந்த நாட்டின் மத்திய வங்கியால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள முதலாவது வெளிநாட்டு வங்கி கொமர்ஷல் வங்கி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
15 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago