2025 மே 08, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் SLT-MOBITEL இன் இணைக்கும் வசந்தம்

S.Sekar   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு புதிதாக அதிவேக இணைய இணைப்புகளையும், PEO தொலைக்காட்சி இணைப்புகளையும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும், ஏற்கனவே காணப்படும் தமது இணைப்புகளை மெருகேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்க இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் SLT-Mobitel முன்வந்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள SLT-MOBITEL பிராந்திய அலுவலகத்துக்கு அருகாமையில் “இணைக்கும் வசந்தம்” எனும் தொனிப் பொருளில் விசேட ஊக்குவிப்பு நிகழ்வை ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை முன்னெடுக்கின்றது.

வட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதியின் உச்ச பயனைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், தமது அன்புக்குரியவர்களுடன் இலகுவாக தொடர்பை ஏற்படுத்தி இணைப்பில் இருப்பதற்கும், உடனுக்குடன் இணையத்தில் தகவல்களை அறிந்து கொள்ளவும், தமக்கு பிடித்த வீடியோக்களை பார்வையிட்டு மகிழவும், தடங்கலில்லாத இணைய வசதிகளை இலகுவான முறையில் பெற்றுக் கொடுப்பதற்காகவும், சிறந்த தொலைக்காட்சி நாளிகை பார்வையிடல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்தத் திட்டத்தை SLT-MOBITEL ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் புதிய இணைப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு பல வெகுமதிகளை வழங்க SLT-MOBITEL முன்வந்துள்ளது. SLT-MOBITEL Fibre இணைப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 100 GB வசதியும், 25 GB YouTube வசதியும் வழங்கப்படும்.

இந்த நிகழ்வில் SLT-MOBITEL இன் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ, குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X