Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 ஒக்டோபர் 24 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், கொழும்பு லேடி ரிட்ஜ்வே ஹொஸ்பிட்டலுக்கு 100 Baby Bloodlines கட்டமைப்புகள் மற்றும் 200 சோடியம் பைகாபனேற் அலகுகள் போன்றவற்றை வழங்க ஹோப் திட்டத்தின் அங்கமாக வழங்க முன்வந்துள்ளது. நிறுவனத்தின் ஊழியர்கள் இந்தத் திட்டத்துக்கு தம்மாலான பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், இந்த எதிர்பாராத தருணங்களில் சிறுவர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டுடன், நோயாளர்களுக்கு சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃவ், ஹோப் திட்டத்துக்கு நிறுவனத்தின் ஊழியர்கள் ஆற்றியிருந்த பங்களிப்புக்காக நன்றி தெரிவித்திருந்தார். பராமரிப்புடனான கூட்டாண்மை கலாசாரத்தினூடாக, நிறுவனத்தின் சகல மட்டங்களிலும் கரிசனையுடனான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். “இந்த சமூகப் பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டினூடாக, இந்த நெருக்கடியான காலப்பகுதியில் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்களை பாதுகாக்க முடிந்துள்ளது.” என்றார்.
லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். ஜே. விஜேசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பெற்றுக் கொடுக்கின்றமைக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இந்த முக்கியமான காலப்பகுதியில் இது உதவியாக அமைந்திருந்தது. எமது சுகாதார கட்டமைப்பை வலிமைப்படுத்துவதாக இந்த பங்களிப்பு அமைந்திருந்ததுடன், நோயாளர்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் வைத்தியசாலை இருப்பதை உறுதி செய்யும்.” என்றார்.
பொரளையிலுள்ள லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை, இலங்கையில் காணப்படும் இலவச சிகிச்சைகளை வழங்கும் மாபெரும் குழந்தை நல வைத்தியசாலையாக அமைந்துள்ளது. 900 க்கும் அதிகமான கட்டில் வசதிகளைக் கொண்டுள்ளதுடன், குழந்தை நலனுக்காக தேசிய நிலையமாக அமைந்துள்ளது.
லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர். சந்துஷ் சேனபதி, ஹோப் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தமைக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்தார். தனியார் துறையினால் பொது சுகாதார நிலையங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான திட்டங்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவையாகும். வழங்கப்பட்டிருந்த மருந்துப் பொருட்கள் எமது சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டார்.
அண்மைக் காலப்பகுதியில், சுகாதாரத்துடன் தொடர்புடைய பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளில் யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை ஈடுபடுத்தியிருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவலின் போது, நிறுவனத்தினால் சமூகச் சென்றடைவுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தேசிய அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் தனது உறுதி மொழிக்கமைய, சுகாதாரம், கல்வி மற்றும் சூழல் போன்ற பிரதான பிரிவுகளில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. சுகாதார அமைச்சுடன் கைகோர்த்து முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டம் இதில் பெருமளவு கவனத்தை ஈர்த்திருந்தது. வைரசிலிருந்து பாதுகாப்பைப் பெறுவது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெருமளவு வெற்றியீட்டிருந்தது. ஒட்சிசன் இயந்திரங்கள், அவசர ட்ரொலிகள், வீடியோ laryngoscopes மற்றும் வென்டிலேற்றர்கள் போன்ற அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களை தேசிய வைத்தியசாலைகளுக்கு நிறுவனம் அன்பளிப்புச் செய்திருந்தது.
9 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago