Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 நவம்பர் 28 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், தமது பாங்கசூரன்ஸ் பங்காளரான பான் ஏசியா வங்கியுடனான வியாபார அறிமுகத்தை அண்மையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையின் 1ல் தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் எனும் நிலையை உறுதி செய்து, யூனியன் அஷ்யூரன்ஸ், பான் ஏசியா வங்கியுடன் 2022 ஜுன் மாதம் பங்காண்மையை ஏற்படுத்தியிருந்தது. இதனூடாக நாட்டின் சகல பாகங்களுக்கும் காப்புறுதி சேவைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இந்தப் பங்காண்மையினூடாக, பான் ஏசியா வங்கிக்கு, சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் முதலீடுகள் போன்றவற்றுக்கு ஆயுள் காப்புறுதி தீர்வுகள் அடங்கலாக பரந்தளவு நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே மற்றும் பான் ஏசியா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி நளீன் எதிரிசிங்க ஆகியோர் இந்த வியாபார அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இரு நிறுவனங்களினதும் நிர்வாக அணியினர் பங்கேற்று, வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பகிரப்பட்ட இலக்கை எய்த தயார்ப்படுத்துவதற்கு அவசியமான சிறந்த உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த மூன்று தசாப்த காலமாக, இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுச் சேர்ப்பதில் எமது நிறுவனம் தம்மை அர்ப்பணித்துள்ளது. இன்று, இலங்கையில் பாங்கசூரன்ஸ் பிரிவில் நாம் முன்னோடிகளாகத் திகழ்கின்றோம். நாட்டிலுள்ள பெருமைக்குரிய நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகளில் ஒன்றான பான் ஏசியா வங்கியுடனான எமது பங்காண்மையின் மூலமாக, நிறுவனத்துக்கு முக்கியமான மைல்கல்லை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. எமது டிஜிட்டல் ஆற்றல்கள் மற்றும் பாங்கசூரன்ஸ் நிபுணத்துவம் போன்றவற்றுடன், பரிபூரண ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக பான் ஏசியா வங்கியுடன் இணைந்து பணியாற்றுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸில் நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் வாடிக்கையாளர்கள் மையப்படுத்தப்பட்டிருப்பார்கள். சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவதனூடாக, இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் டிஜிட்டல் மயமாக்கத்தில் நாம் முக்கிய பங்காற்றியுள்ளோம். சகல அம்சங்களையும் கொண்ட எமது மொபைல் app ஆன Clicklife, வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற டிஜிட்டல் அனுபவத்தை வழங்குகின்றது. இந்தப் பங்காண்மையின் பயனாக, பான் ஏசியா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு, பெருமளவு Clicklife app உள்ளம்சங்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். இவற்றில், 85 க்கும் அதிகமான பங்காளர்களிடமிருந்து வெகுமதிகள் அடங்கியிருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது சுகாதாரம் மற்றும் நிதி ஆரோக்கிய நிலையை பேணுவதற்கு உதவியாக அமைந்த அம்சங்களும் காணப்படுகின்றன.” என்றார்.
பான் ஏசியா வங்கியின் உதவி பொது முகாமையாளர் (நுகர்வோர் கடன்) சியான் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “சரியான பங்காண்மையினூடாக வியாபார வளர்ச்சி ஏற்படுத்தப்படுவதுடன், பரஸ்பர அனுகூலம் வாய்ந்த பெறுபெறுகளை எய்தக்கூடியதாகவும் இருக்கும். நிதி உள்ளடக்கம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த தீர்வுகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில், 27 வருடங்களுக்கு மேலாக இலங்கைச் சமூகத்தாருக்கு எமது வங்கி சேவைகளை வழங்குகின்றது. நாம் பெற்றுக் கொண்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச கௌரவிப்புகளினூடாக இது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மற்றும் நம்பிக்கை வாய்ந்த ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் கைகோர்த்து, எமது வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, உள்ளடக்கமான காப்புறுதிகளை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது வியாபாரத்துக்கு இந்தப் பங்காண்மை பயனளிப்பதாக அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், நவீன ஆயுள் காப்புறுதி தீர்வுகளுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்க உதவியாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
8 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago