Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாம் இயங்கும் சமூகம் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தும் யூனியன் மனிதாபிமானம், எனும் யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமம், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் நலன் ஆகியவற்றைப் பரப்புவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது.
2016 நிறைவடைந்ததைத் தொடர்ந்து, யூனியன் மனிதாபிமானம் சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகள் என்பது, சமூகத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
2016 வருட காலப்பகுதியில், கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகிய தரப்பினரின் உதவியுடன் மொத்தமாக 57 டெங்கு விழிப்புண்வுச் செயற்றிட்டங்களையும், 60க்கும் அதிகமான தலசீமியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், 14 நீரிழிவு தடுப்பு நிகழ்ச்சிகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது.
டெங்கு நோயிலிருந்து சமூகத்தை விடுவிப்பது தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் கவனம் செலுத்தி வருவதுடன், நாடு முழுவதையும் அடிப்படையாகக் கொண்டு, டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டமொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. வீடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு, டெங்கு ஒழிப்பு சிரமதான செயற்பாடுகள் மற்றும் கையேடுகள் விநியோகம் போன்றன நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மொத்தமாக 55 டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்கள் ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மேலும், நாடு முழுவதிலும் நீரிழிவு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிகளின் போது, இனங்காணல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நீரிழிவால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலிருந்த நோயாளர்களுக்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன.
மேலும், பாரதூரமான குருதியுடன் தொடர்புடைய குறைபாடு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. தலசீமியா விழிப்புணர்வு மற்றும் தவிர்ப்பு தொடர்பான செயற்றிட்டங்கள் சமூகங்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்தின் மூலமாக, குருதி நோய் பரவுவது தவிர்க்கப்படுவதுடன், போதியளவு அறிவின்மை காரணமாக சமூகங்களில் ஏற்படக்கூடிய பாரதூரமானத் தாக்கங்களைத் தவிர்த்துக்கொள்ள ஏதுவாக அமைந்திருந்தது.
இந்த செயற்பாடுகள் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், “2016ம் ஆண்டில் நாம் முன்னெடுத்திருந்த எமது சமூகப்பொறுப்புணர்வுச் செயற்பாடுகள் மூலமாகக் கிடைத்துள்ள பெறுபேறுகளையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆனாலும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய மேலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக எமது யூனியன் மனிதாபிமானம் வர்த்தக நாமத்தினூடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. எனவே, சமூக ஈடுபாட்டை மேம்படுத்த நாம் தொடர்ந்தும் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago