Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரிட்ஸ்பரி, தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் பெருமளவு எதிர்பார்ப்புகளுடன் இடம்பெறும் “ரிட்ஸ்பரி சுப்பர் 16 ஜுனியர் ரக்பி கானிவல் 2022” போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்திருந்தது. தேசத்தின் விளையாட்டுத் துறையை கட்டியெழுப்புவதில் வர்த்தக நாமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் நீடிப்பாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
12ஆவது வருடமாகவும் இடம்பெற்ற இந்த ஆண்டின் சுப்பர் 16 ஜுனியர் ரக்பி கானிவல் போட்டிகளில் 23 பாடசாலைகளின் 10 வயதுக்குட்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட 112 அணிகள் பங்கேற்றன. கானிவலில் முதல் மூன்று சுற்றுப் போட்டிகளும் றோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதியில் இடம்பெற்றதுடன், ஏனைய போட்டிகள் ஒக்டோபர் 2ஆம் திகதி இடம்பெற்றன.
இந்தக் களியாட்ட நிகழ்வினூடாக வளர்ந்து வரும் ரகர் விளையாட்டு வீரர்களுக்கு தமது திறமைகளை களிப்பான முறையில் போட்டிகரமான சூழலில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. விளையாட்டில் பங்கேற்கும் சகல விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உண்மையான விளையாட்டுத் திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், சம்பியன் ஒருவரை தெரிவு செய்யாது.
ரக்பி கானிவல் தொடர்பில் சிபிஎல் ஃபுட்ஸ் இன்டர்நஷனல் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை தயார்ப்படுத்தும் பயணத்தில் மற்றுமொரு படியாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இளம் ஆற்றல் படைத்த விளையாட்டு வீரர்கள் மத்தியில் அவர்களின் திறமைகளை ஊக்குவித்து மேம்படுத்துவதில் ரிட்ஸ்பரி எப்போதும் தம்மை அர்ப்பணித்துள்ளது. ரிட்ஸ்பரி சுப்பர் 16 ஜுனியர் ரக்பி கானிவல் 2022 நிகழ்வை முன்னெடுக்கப்பட்டது எமக்கு மிகவும் பெருமையாக அமைந்துள்ளதுடன், அனைத்து அணியினரும் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்திருந்தனர் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் ஷாஹிட் சங்கானி இந்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “ரிட்ஸ்பரி சுப்பர் 16 ஜுனியர் ரக்பி கானிவல் 2022, ரிட்ஸ்பரி உடன் தொடர்ந்தும் 2 ஆவது வருடமாக கைகோர்த்திருந்ததையிட்டு பெருமை கொள்கின்றது. இந்தப் பங்காண்மையினூடாக இலங்கையில் ஜுனியர் ரக்பி திறமையை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என நாம் நம்புகின்றோம். இந்தப் போட்டிகளில் இவ்வாண்டில் மொத்தமாக 23 பாடசாலைகளின் 112 அணிகள் பங்கேற்றன. இந்நிகழ்வின் வெற்றிக்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்திருந்தது.” என்றார்.
இலங்கையில் ரக்பி விளையாட்டு புகழ்பெற்றுள்ள நிலையில், அதிகளவு ரசிகர்களையும் கொண்டுள்ளது. இலங்கையின் சொக்லட் துறையில் சந்தை முன்னோடி எனும் நிலையைக் கொண்டுள்ள ரிட்ஸ்பரி, இந்த ஆண்டும் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெறுவதை உறுதி செய்தது.
ரக்பி விளையாட்டுக்கு மேலதிகமாக, இலங்கையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளின் ஆதரவாளராக ரிட்ஸ்பரி திகழ்கின்றது. குறிப்பாக, சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப், விதுதய ரிட்ஸ்பரி நீச்சல் சம்பியன்ஷிப், ரிட்ஸ்பரி ஜுனியர் தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் மற்றும் SLTA டெனிஸ் டென்ஸ் அகில இலங்கை பாடசாலை மாணவர் டெனிஸ் விளையாட்டு தினம் போன்றவற்றுக்கு ஆதரவளிக்கின்றது.
8 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago