Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
"ரைசிங் சக்தி 2023 விநியோகத்தர் மாநாடு" அண்மையில் பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றது.
இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலை நிலவும் சூழலில், நாட்டை வளமான மற்றும் புதுமையான விவசாய எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துவதில் பங்களிப்பு வழங்கும் வகையில். சக்திமான் தமது அனைத்து தயாரிப்புகளையும் அனைத்து சர்வதேச தரங்களுடனும் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய விவசாயத்தை இயந்திரமயமாக்குவதில் "சக்திமான்" வர்த்தக நாமத்தின் தாய் நிறுவனமான Tirth Agro Technology Private Limited நிறுவனம், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முக்கிய பங்காற்றி வருகிறது.
1997 ஆம் ஆண்டு குஜராத்தின் ராஜ்கோட்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்தியா முழுவதும் 850 விற்பனையாளர்கள், 64 விநியோகஸ்தர்கள் மற்றும் 105 உதிரி பாகங்கள் விநியோகஸ்தர்களை உள்ளடக்கிய பரந்த விற்பனை வலையமைப்பை கொண்டு செயற்படுகின்றது.
கடந்த தசாப்தத்தில், "சக்திமான்" இலங்கையில் விவசாயத்தை இயந்திரமயமாக்குவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், பண்ணை தொழில்நுட்பத்தின் புதிய சகாப்தத்தையும் அறிமுகப்படுத்தியது. அதிநவீன பண்ணை உபகரணங்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பு, நாட்டின் விவசாய இயந்திரத் தொழிலில் முன்னணியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியுடன் எங்களை வைத்துள்ளது.
எமது கரும்பு அறுவடை இயந்திரம் 3737-Tejas முதல் செயல் திறன் மிகு நெல் மாற்று இயந்திரம் வரை, எங்கள் தயாரிப்புகள் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் உழைப்பு மிகுந்த சுமைகளைத் தணித்துள்ளன.
இந்த தீர்வுகள், முன்னோடி மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியமானவை என்பதுடன், விவசாயத்தின் பொருளாதார தாக்கத்தை மேம்படுத்தும் எங்கள் தொலைநோக்கு பார்வையுடனான சீரமைப்பிலும் சரியாக உள்ளன.
இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு ஆதரவளிக்கும் எம் வாக்குறுதியானது எல்லைகளுக்கு அப்பாலும், குறிப்பாக இலங்கை வரைகூட நீண்டுள்ளது. இடைவிடாத ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலம், இலங்கையின் விவசாய நிலப்பரப்பை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கையும் உயர்த்துவதுடன், புதுமைகளின் மூலம் செழிப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்.
"ரைசிங் சக்தி 2023 விநியோகத்தர் மாநாடு" என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல: இது இலங்கையின் விவசாய செழுமைக்கான நமது உறுதிப்பாட்டின் அறிக்கையாகும். ஹெய்லிஸ் அக்ரிகல்ச்சர், ஓவர்சீஸ் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட், டிஎஸ்எல் ஹோல்டிங்ஸ் மற்றும் ஏஎம்டபிள்யூ போன்ற மதிப்புமிக்க பங்காளர்களுடன், இந்த மாநாடு நடைபெற்றது.
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
1 hours ago